ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு சம்பந்தமானது: அமெரிக்கா
ஜம்மு காஷ்மீர் நடவடிக்கைகள் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என இந்தியா குறிப்பிட்டு உள்ளது. ஆனாலும் தடுப்புக்காவல்கள் தொடர்பான தகவல் கவலை அளிப்பதாக உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் நடவடிக்கைகள் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என இந்தியா குறிப்பிட்டு உள்ளது. ஆனாலும் தடுப்புக்காவல்கள் தொடர்பான தகவல் கவலை அளிப்பதாக உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து, அதிகாரம் அளிக்கும் 370 மற்றும் 35 ஏ-வது பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த மாநிலம் ஜம்மு- காஷ்மீர் என ஒரு யூனியன் பிரதேசம், லடாக் என மற்றொரு யூனியன் பிரதேசம் என இரு பகுதிகளாக பிரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இதற்கான ஒப்புதலை குடியரசு தலைர் வழங்கியுள்ளார் எனவும் கூறினார்.
இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மேற்கொண்டுள்ள மறுசீரமைப்பு குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஓர்ட்டகஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்பு சட்டம் வழங்கும் சிறப்பு அந்தஸ்து ரத்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது என்ற இந்தியாவின் அறிவிப்பை கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதேசமயம், இந்த நடவடிக்கைகள் முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என இந்தியா குறிப்பிட்டு உள்ளது. ஆனாலும் தடுப்புக்காவல்கள் தொடர்பான தகவல் கவலை அளிப்பதாக உள்ளது.
மேலும் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்புகளும் (பாகிஸ்தான் -இந்தியா) அமைதி காக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.