அடிபணிந்தது அமெரிக்கா; தடுப்பூசி மூலப்பொருள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என உறுதி
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பான முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசி மருந்து தயாரிப்பை துரிதப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, தடுப்பூசி தயாரிக்க (Corona Vaccine) தேவையான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும்படி அமெரிக்க அரசிடம் கோரிக்கை வைத்தது.
ஆனால், அமெரிக்கா பிடிவாதமாக, அமெரிக்கர் நலனே எங்களுக்கு முக்கியம் என கூறி, கொரோனா தடுப்பூசிக்கான (Corona Vaccine) மூலப்பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்தது.
இந்நிலையில், இந்தியாவுக்கு தடுப்பூசி மூலப்பொருட்களை வழங்குவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது. பல நிலைகலீல் கொடுக்கப்பட்ட கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு கொரோனா தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை வழங்க பிடென் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் (Jake Sullivan) இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுடன் (Ajit Doval) தொலைபேசி மூலம் நடந்த உரையாடலுக்கு பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ALSO READ | Corona Pandemic: முதலில் கை விரித்த அமெரிக்கா, இப்போது உதவிக்கரம் நீட்டுகிறது
"COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், இந்தியாவில் களத்தில் சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பதற்கும், இந்தியாவுக்கு உடனடியாக கிடைக்கக்கூடிய சிகிச்சை முறைகள், விரைவான நோயறியும் சோதனைக் கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) ஆகியவற்றை அமெரிக்கா உடனடியாக இந்தியாவிற்கு அனுப்பும். " NSC செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்னின் அறிக்கை படித்தது.
இந்தியாவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்திக்கான உதவிகளை வழங்குவது குறித்தும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
மோடியின் Medical Diplomacy என்னும் ஆக்கபூர்வமான ராஜீய நடவடிக்கையின், விளைவு எனக் கூறலாம். உலக நாடுகள் பேரிடரின் போது, உலகமே ஒரு குடும்ப மக்களாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் வகையில், தேவைப்படும் உலக நாடுகளுக்கு வணிக ரீதியாகவும், உதவியாகவும் தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்து, வசுதைவ குடும்பகம் என்னும் வழியை பின்பற்றியதன் காரணமாக, அமெரிக்க இன்று முரண்டு பிடிக்க முடியாமல் அடிபணிந்துள்ளது.
ALSO READ | தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை கொடுக்க முடியாது என கைவிரிக்கும் அமெரிக்கா