புது டெல்லி: நடந்து வரும் அன்லாக் 3 செயல்பாட்டின் போது தனிநபர்கள் மற்றும் பொருட்களின் சரக்கு போக்குவரத்துக்கு மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கு உள்ளேயும் இயங்க எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்கக்கூடாது என்பதை உறுதிப்படுத்த அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அன்லாக் 3 (Unlock 3) வழிகாட்டுதல்படி மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்கு உள்ளே தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பிள்ளது. 


ALSO READ |  Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன..!!!


அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கான எழுதிய கடிதத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா (Ajay Bhalla), பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களால் பொருட்களின் சரக்கு போக்குவரத்துக்கு இயக்கத்திற்கு உள்ளூர் அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக தகவல்கள் வந்துள்ளன.


இதுபோன்ற கட்டுப்பாடுகளால், மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும்,  விநியோகச் சங்கிலிகளை பாதிக்கின்றன என்றும், இதன் விளைவாக பொருளாதார செயல்பாடு மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.


அன்லாக் 3 (Unlock Guidelines) வழிகாட்டுதல்கள் படி, தனி நபர்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்கும் உள்ளேயும் எந்த தடையும் இருக்காது என்று தெளிவாக அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


ALSO READ | Unlock 3 guidelines : இரவு ஊரடங்கு நீக்கம்; ஆகஸ்ட் 5 முதல் ஜிம்களை திறக்க அனுமதி


எந்தவொரு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படக்கூடாது என்றும், அன்லாக் 3 வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.