மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலத்திற்கு உள்ளே தனிநபர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது. அதன் முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலைத் தடுக்க, ஜிம் மற்றும் யோகா மையங்களை மார்ச் மாதம் கடைசி வாரத்தில் மூடப்பட்டது. "உடல் செயல்பாடு மற்றும் யோகா ஆரோக்கியத்திற்கு முக்கியம்" என்பதால், நாடு முழுவதும் அன்லாக் (Unlock 3) மூன்றாம் கட்டத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா மையங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.