பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கட்டணம் செலுத்த ரூ.11,000 வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (COVID-19) இந்தியாவைத் தாக்கியதிலிருந்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகள் அதிகமாக பரவி வருக்கின்றனர். குறிப்பாக, இணையத்தில் உள்ள அனைத்தும் உண்மை இல்லை, மேலும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் செய்திகளை நம்புவதற்கு முன் உண்மைகளை சரிபார்ப்பது அவசியம். 


இந்நிலையில், தற்போது ஒரு இடுகை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் (students of schools and colleges) அனைத்து மாணவர்களுக்கும் கல்விக்கட்டணம் செலுத்த ரூ.11,000 வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் பல மாணவர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்பது வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து இந்த முடிவு மையத்தால் எடுக்கப்பட்டுள்ளது என்ற அந்த பதிவு மேலும் கூறியுள்ளது.


ALSO READ | நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும்: மத்திய அரசு!


ஆனால், உண்மை என்னவென்றால், மத்திய அரசு அத்தகைய எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, அந்த இடுகை போலியானது. 


போலி செய்திகளை கண்டித்து, PIB தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், ”உரிமைகோரல்: - கொரோனா தொற்றுநோய் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளின் அனைத்து மாணவர்களுக்கும் தங்கள் கட்டணத்தை செலுத்த மத்திய அரசு ரூ .11,000 வழங்குவதாக ஒரு வலைத்தள பதிவில் கூறப்பட்டுள்ளது. #PIBFactCheck: - இந்த வலைத்தள பதிவு போலியானது. இதுபோன்ற எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை” என தெரிவித்துள்ளது. 



இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைத் தடுப்பதற்காக பத்திரிகை தகவல் பணியகம் இந்த உண்மையைச் சரிபார்க்கும் தளத்தை 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தியது. PIB-ன் உண்மைச் சரிபார்ப்புக் குழுவின் நோக்கம் “பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காண்பது”.