நவம்பர் 1-ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..!
பட்டப் படிப்பு (UG) மற்றும் பட்ட மேற்படிப்பு (PG) முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 2020-21 கல்வியாண்டு அட்டவணையை, மத்திய கல்வித்துறை (Union Ministry of Education) அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான ‘நிஷாங்க்’-கில் தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... "COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கமிஷன் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டது மற்றும் 2020-21 அமர்வுக்கான பல்கலைக்கழகங்களின் முதல் ஆண்டு பட்டதாரி மற்றும் முதுகலை மாணவர்களுக்கான கல்வி அட்டவணை குறித்த வழிகாட்டுதல்களை @ugc_india அங்கீகரித்துள்ளது.
In view of the COVID-19 pandemic, the Commission has accepted the Report of the Committee and approved the @ugc_india Guidelines on Academic Calendar for the First Year of Under-Graduate and Post-Graduate Students of the Universities for the Session 2020-21.
Suggested calenda pic.twitter.com/JPYNhiWb0k
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) September 22, 2020
அக்டோபர் மாத இறுதிக்குள் மாணவர்கள் சேர்க்கையை முடிக்க வேண்டும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கும். முதல் பருவத் தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டு, ஏப்ரல் 4 ஆம் தேதி வரை விடுமுறை விடப்படும்.
ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் 2 ஆம் பருவ வகுப்புகள் தொடங்கும். இரண்டாம் செமஸ்டர் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதிக்குள் நடத்தப்பட்டு, விடுமுறை விடப்படும். அதற்கடுத்த கல்வியாண்டு, புதிதாக வரும் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும்.
ALSO READ | அதிகரிக்கும் COVID-19 பாதிப்பு... இந்த நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு!!
மேலும், இழந்த கற்றல் நேரத்தை ஈடுசெய்ய அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இடைவெளிகளையும் விடுமுறைகளையும் குறைக்க கல்வி நிறுவனங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
விடுமுறை குறித்த மத்திய அரசு அட்டவணையில் கூறியுள்ளது:
- செமஸ்டர் தேர்வுக்கு பின்பான விடுமுறை காலம் 27.03.2021 முதல் 04.04.2021.
- செமஸ்டர் தேர்வு விடுமுறைக்கு பின்பு வகுப்புகள் 05.04.2021 முதல் தொடங்கும்.
- தேர்வுக்கு தயாராக விடுமுறை காலம் 01.08.2021 முதல் 08.08.2021 வரை இருக்கும்.
- இரண்டாவது செமஸ்டர் தேர்வு 09.08.2021 முதல் 21.08,2021 வரை நடைபெறும்.
- 2வது செமஸ்டர் விடுமுறை 22.08,2021 முதல் 29.08,2021 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த கல்வியாண்டில் கல்லூரி வகுப்புகள் 30.8.2021 முதல் தொடங்கும்.
முன்னதாக உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாற்று கல்வி அட்டவணையை ஏப்ரல் 29 அன்று UGC வெளியிட்டது. அதில், ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு அல்லது II செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. மேலும், ஜூலை இறுதிக்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் UGC அந்த காலண்டரில் கூறியிருந்தது.
சேர்க்கை ரத்து செய்யப்பட்டால் முழு பணத்தைத் திருப்பித் தரப்படும் என்று கல்வி அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) அறிவித்தது. ஊரடங்கு மற்றும் நிதி தொடர்புடைய காரணிகளால் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக, 2020 நவம்பர் 30 ஆம் தேதி வரை மாணவர்களின் சேர்க்கை / இடம்பெயர்வு ரத்துசெய்யப்பட்டதன் காரணமாக முழு கட்டணமும் திரும்பப் பெறப்படும், இந்த அமர்வுக்கு ஒரு சிறப்பு வழக்கு, தொடரப்படும்” என அமைச்சகம் கூறியுள்ளது.