புதுடெல்லி : இன்று முதல் ஏ.டி.எம்.,கள் செயல்பாடுக்கு வருகின்றன. ரூபாய் 500 மற்றும் ரூபாய் 1000  நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். அதையடுத்து ஏடிஎம் இரண்டு நாட்கள்( 9,10-ம் தேதி) இயங்காது என தெரிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், தபால் நிலையங்கள் மூலம் நேற்று ரூ.2000 புதிய நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளது. இன்று இரண்டாவது நாளாக வங்கிகளுக்கு மக்கள் படையெடுத்தனர். ஒரு நாளைக்கு 4000 ரூபாய் அளவுக்கு மட்டுமே மாற்ற முடியும் என்று கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதால் இன்றும் வங்கிகளில் கூட்டம் காணப்பட்டது. இது தவிர வங்கிகளில் நிறைய பேர் ரூ.500, ரூ.1000 பழைய நோட்டுகளை கொண்டு வந்து டெபாசிட் செய்தனர். மேலும் இன்று முதல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது. நாடு முழுவதும் வெறும் 10 சதவீத ஏடி.எம் கள் மட்டுமே திறந்து இருந்தன. திறந்து இருந்த பெரும்பாலான ஏடி.எம் களிலும் பணம் காலியானதால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.  இந்நிலையில் பொதுமக்கள் அவதி படுகின்றனர். 


ஏ.டி.எம். மையங்களில் காலை முதலே மக்கள் அதிக அளவில் திரள ஆரம்பித்து விட்டனர். சில இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் கட்டுக்கடங் காத கூட்டம் காணப்பட்டது. அவர்களை போலீசார் ஒழுங்குப்படுத்தினார்கள். இன்று முதல் ஏடிஎம் செயல்படும் என்று, அதில் பணம் எடுப்பவர்களுக்கு 2 ஆயிரம், 100 ரூபாய் நோட்டுகள் தான் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நவம்பர் 19-ம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய், 4000 ரூபாயாக அதிகரிக்கும்.