400 படுக்கைகள் கொண்ட COVID மருத்துவமனையை நோய்டாவில் திறந்துவைத்தார் யோகி ஆதித்யநாத்!!
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நோய்டா, செக்டர் 39 இல் 400 படுக்கைகள் கொண்ட COVID -19 மருத்துவமனையை சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) திறந்து வைத்தார்.
நோய்டா: உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) நோய்டா, செக்டர் 39 இல் 400 படுக்கைகள் கொண்ட COVID -19 மருத்துவமனையை சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நோய்டா மாவட்ட மாஜிஸ்ட்ரேட் சுஹாசும் பங்கு கொண்டார்.
இதற்கிடையில், மாவட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வருகையின் காரணமாக பிரிவு 144 நோய்டாவில் (Noida) விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய நோய்டா காவல்துறை, “சனிக்கிழமை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் வருகைக்கு முன்னதாக நோய்டாவில் பிரிவு 144 விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் பறக்கவும் அனுமதி இல்லை. 15 கெஜட் அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள 700 கான்ஸ்டபிள்களுக்கு COVID-19 சோதனை செய்யப்படும்” என்று கூறியிருந்தனர்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, யோகி ஆதித்யநாத், மாவட்டத்தில் கோவிட் -19 இன் நிலைமை குறித்து கௌதம் புத் நகரில் மக்கள் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார். சஞ்சய் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் முதுகலை கல்வி நிறுவனம் மற்றும் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர் குழுக்களை கான்பூர் நகருக்கு அனுப்பி, அங்கு தற்போதுள்ள சுகாதார உள்கட்டமைப்பை வழிநடத்தி உதவ பணிக்குமாறு அவர் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
ALSO READ: Covid-19 India: இதுவரை 14 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்; 21 லட்சத்தை நெருங்கும் எண்ணிக்கை
கௌதம் புத் நகரில் வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை 5,806 ஆக உயர்ந்தது. இதில் 906 பேர் சிகிச்சையில் உள்ளனர், 4,857 பேர் குணமடைந்துள்ளனர், 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் மொத்த COVID -19 தொற்றின் எண்ணிக்கை 1,13,378 ஆக உள்ளது. இதில் 44563 பேர் செகிச்சையில் உள்ளனர். 66,834 பேர் குணமடைந்துள்ளனர். 1,918 பேர் இறந்தனர்.
இந்தியாவின் கோவிட் -19 எண்ணிக்கை இன்று 20,88,61 ஐ எட்டியுள்ளது. ஒரு நாளில் 61,537 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 48,901 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரையிலான மீட்பு எண்ணிக்கை 13,78,105 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தற்போது 6,19,088 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் COVID-19 நோயாளிகளின் மீட்பு விகிதம் 67.62 சதவீதமாக உள்ளது.
ALSO READ: நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி... Covid-19 தடுப்பூசி வெறும் ₹.225 மட்டுமே...!