உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க, சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. ஹைதராபாத் மக்களவை தொகுதியின் உறுப்பினரும், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | "கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" பாஜகவை கிண்டல் செய்த எம்பி மஹுவா


இதற்காக அம்மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று பில்குவா பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் கார் மூலம் டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார். சஜர்சி சுங்கச்சாவடி பகுதியை அவருடைய கார் அடைந்ததும், மறைந்திருந்த மர்ம நபர்கள் ஒவைசி காரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.



சுமார் மூன்று, நான்கு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்ட அவர்கள், உடனடியாக அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒவைசியின் கார் பஞ்சராகிவிட்டது. ஒவைசி உள்ளிட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த தகவலை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒவைசி, சஜர்சி பகுதியில் 2 பேர் துப்பாக்கியால் சுட்டதாக தெரிவித்துள்ளார். அவர்களது குழுவில் 4 பேர் இருந்ததாக தெரிவித்துள்ள அவர், தான் மற்றும் உடனிருந்தவர்கள் அனைவரும் நலமாக இருப்பதாக கூறியுள்ளார். ஒவைசி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக நிகழ்விடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர். 


ALSO READ | ’பா.ஜ.க வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது’ - ராகுல்காந்தி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR