"கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" பாஜகவை கிண்டல் செய்த எம்பி மஹுவா

Mahua Moitra: "இன்று நான் லோக்சபாவில் பேசுவேன், மாட்டு மூத்திரம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என பாஜகவை கிண்டல் செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 3, 2022, 05:47 PM IST
  • ட்விட்டர் மூலம் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்த எம்.பி. மஹுவா மொய்த்ரா.
  • கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் தனது குழுவை பாஜக தயாராக வைத்திருங்கள்.
  • மக்களவையில் பேச உள்ளேன்.. கோமியமும் குடித்துவிட்டு வாருங்கள்.
"கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" பாஜகவை கிண்டல் செய்த எம்பி மஹுவா title=

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் மூலம் பாஜக தலைவர்களுக்கு சவால் விடுத்திருக்கிரார். அவரின் இந்த சவால் பாஜக தலைவர்களை மத்தியில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்று வரும் வேளையில், இன்று (வியாழக்கிழமை) மாலை நான் பேசுகிறேன். "பா.ஜ.க.வினரே கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" எனக் ப் கூறியுள்ளார். 

கோமியமும் குடித்துவிட்டு வாருங்கள்:

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பேச்சுக்கு பாஜக வேண்டுமென்றே இடையூறு விளைவிப்பதாக குற்றம்சாட்டிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, "கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் தனது குழுவை இன்று பாஜக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

மோடி அரசுக்கு சவால் விட்ட மஹுவா மொய்த்ரா:

மொய்த்ரா தனது ட்விட்டரில், 'குடியரசுத் தலைவர் உரை குறித்து இன்று மாலை மக்களவையில் பேச உள்ளேன். நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், "கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் பாஜகவினரே, உங்களுடைய படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் கோமியமும் குடித்துவிட்டு வாருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். 

ALSO READ | ’பா.ஜ.க வாழ்நாளில் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது’ - ராகுல்காந்தி

மோடி அரசை கடுமையாக சாடிய ராகுல் காந்தி: 

மஹுவா மொய்த்ரா தனது ட்வீட்டர் பதிவு மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை கடுமையாக விமர்சனம் செய்யப்போவதாக தெளிவான அறிகுறிகளை அளித்துள்ளார். முன்னதாக, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, மோடி அரசை கடுமையாக சாடினார். மோடி அரசின் கொள்கைகளே சீனா மற்றும் பாகிஸ்தானை நம்மை நெருங்கி வருவதற்கு காரணம் என்று ராகுல் கூறினார். இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாகவும் ராகுல் காந்தி கூறினார். 2021ல் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் குற்றம் சாட்டினார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் உரையின் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா சவால் விடுத்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. 

ALSO READ | Highlights of Budget 2022: பட்ஜெட்டின் முக்கியமான 40 ஹைலைட் அம்சங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News