பாகிஸ்தான் சிறையில் வாடிய இந்திய கைதி 8 ஆண்டுகளுக்கு பின் வீடு திரும்புகிறார்..!!
பாகிஸ்தானில் `உளவு` வேலை பார்த்ததாக சிறையில் அடைக்கப்பட்ட உ.பி.யை சேர்ந்த நபர், 8 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்புகிறார்
பாகிஸ்தானில் 'உளவு' வேலை பார்த்ததாக சிறையில் அடைக்கப்பட்ட உ.பி.யை சேர்ந்த நபர், 8 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்புகிறார்
லக்னோ: கான்பூரின் பஜாரியாவைச் சேர்ந்த 70 வயதான ஷம்சுதீன், 8 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தனது குடும்பத்தினருடன் இணைய உள்ளார். உளவாளி என்ற சந்தேகத்தின் பேரில் 2012 ல் கைது செய்யப்பட்ட பின்னர் கராச்சியில் உள்ள சிறையில் எட்டு ஆண்டுகள் கழித்த அவர் பாகிஸ்தானிலிருந்து திரும்பியுள்ளார்.
அக்டோபர் 26 ம் தேதி பஞ்சாபில் வாகா-அத்தாரி எல்லை வழியாக இந்தியாவுக்குச் வந்தபின் தனது குவாரண்டைன் காலத்தை நிறைவு செய்துள்ளதால் குடும்பத்துடன் இணைய காத்திருக்கும் ஷம்சுதீனின் காத்திருப்பு முடிவடைய உள்ளது.
ஷம்சுதீன் உளவு பார்த்ததாகவும் மற்றும் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்றும் பாகிஸ்தான் நீதிமன்றம் 2012 ல் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. அவர் அக்டோபர் 24, 2012 அன்று கராச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ஷூவின் மேல் பாகத்தை தயாரிப்பதில் நிபுணர். 1992 ஆம் ஆண்டில் அவர் கான்பூரிலிருந்து டெல்லிக்கு வேலை தேடி வந்தபோது அவரது சோதனை காலமும் தொடங்கியது. அவரது பாகிஸ்தான் உறவினர்களில் ஒருவர் அளித்த தவறான வழிகாட்டுதலால், இவர் பாகிஸ்தானுக்கு சென்றார். அவரது உறவினர் ஷம்சுதீன் ஒரு பாகிஸ்தான் நாட்டவர் என்று கூறி போலி ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக ஒரு போலி அடையாளத்துடன் கழித்த பின்னர், 2012 ல் இந்தியா திரும்புவதற்காக தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முயன்றபோது, ஷம்ஷுதீன் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டார்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த இந்திய உளவாளி என்று பாக் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தேச விரோத குற்றங்களில் ஈடுபட்டதாகவும், ஆவணங்களை மோசடி செய்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இப்போது ஷம்சுதீனை மீண்டும் கான்பூருக்கு அழைத்து வந்து அவரை மீண்டும் குடும்பத்துடன் இணைக்க சட்டப்பூர்வ பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஷம்ஷுதீன் செவ்வாய் அல்லது புதன்கிழமைக்குள் கான்பூரை அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் சிறைசாலையில் சித்திரவதை அனுபவித்து வந்த நிலையில், அவர் வீட்டிற்கு வருவது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
ALSO READ | தமிழக சிறை கைதிகளுடன் குற்ற உணர்வில் இருந்து மீள்வது குறித்து உரையாடிய சத்குரு....!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR