உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமிக்கு தண்ணீர் கொடுக்க மறுத்த 2 கோவில் பூசாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள குன்னார் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி சுதா இவர் தனது தந்தையுடன் வயலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு கடுமையாக தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதனால் தனது தந்தையிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.


இதனையடுத்து கோவிலுக்கு அருகில் உள்ள கை பம்பில் தண்ணீர் பிடித்து செல்ல கோவில் பூசாரியிடம் அனுமதி கேட்டுள்ளார். அப்போது கோவிலில் வேலை செய்துகொண்டிருந்த பூசாரி தலித்துகள் யாரும் இதில் தண்ணீர் குடிக்க கூடாது என்று சிறுமியின் தந்தையிடம் கடுமையாக கூறினார். மேலும் தலித் இனத்தை சேர்ந்த உங்களுக்கு தண்ணீர் தர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினார். 


இதனால் கோபம் அடைந்த சிறுமியின் தந்தை கோவில் பூசாரியிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் சிறுமியின் தந்தையை 2 கோவில் பூசாரிகள் சரமாறியாக அடித்து உதைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் குடிக்க தண்ணீர் தர மறுத்த 2 கோவில் பூசாரிகளை போலீசார் கைது செய்தனர்.