நண்பனாக இருந்தாலும், குடித்தால் அப்படி நிதானம் இழந்துவிடுமா? என்ற கேள்வி அவ்வப்போது பலரும் எழுப்புவது தான். அப்படி ஒரு அண்மை சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டுகிறது. உத்தரபிரதேசத்தில் நண்பர்களுக்கு நடந்த சண்டையில், தலித் நண்பரின் காதில் சிறுநீர் கழித்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நல்ல உறவில் இருந்த இரு நண்பர்களும், மது அருந்திய பிறகு, வாய்வார்த்தை முற்றி தகராறு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.  ஜவஹர் படேல் என்பவரும், குலாப் கோல் என்பவரும் இணக்கமாக இருந்தாலும், போதையில் எல்லைகள் மீறப்பட்டுள்ளன.


வாய்த் தகராறாக ஆரம்பித்த சண்டையில், குலாப் கோல் என்ற தலித்தை தாக்கிய ஜவஹர் படேல், பிறகு காதுகளில் சிறுநீர் கழித்திருக்கிறார். இந்த அதிர்ச்சித் தகவலை, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.


உத்தரபிரதேசத்தின் சோன்பத்ராவில் தலித் ஒருவரின் காதில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஒருவர் மற்றொருவர் மீது சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ வெளியாகிய நிலையில், போலீசார் இருவரை  கைது செய்துள்ளனர்.


மேலும் படிக்க | 6 மாதத்துக்கு முன்பு நடந்த கொலை.. காட்டிக்கொடுத்த போதை..!  திடுக்கிடும் திருப்பம்!


இச்சம்பவம் ஜூலை 11 ஆம் தேதி மாவட்டத்தின் ஜுகைல் பகுதியில் நடந்துள்ளது. இருவரும் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், ஜவஹர் படேல், குலாப் கோல் காதுகளில் சிறுநீர் கழிப்பதற்கு முன்பு அவரைத் தாக்கியிருக்கிறார்.


இச்சம்பவம் வெளி வந்ததையடுத்து, ஏராளமான போலீசார் மற்றும் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதிக்கப்பட்டவர் குடிபோதையில் இருந்ததால், என்ன நடந்தது என்று தெரியவில்லை. இருப்பினும், இந்த சம்பவத்தின் வீடியோவை யாரோ படம்பிடித்துள்ளனர், பின்னர் அது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.


இது தொடர்பாக குலாப் கோல் புகார் அளித்துள்ளார், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்று சிங் கூறினார். ஜவஹர் படேல் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.


பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த தஷ்மத் ராவத் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறி மத்தியப் பிரதேசத்தில் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்ட சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த சம்பவத்தின் வீடியோ வைரலானதை அடுத்து ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பழங்குடியினத் தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவின் வீடு  இடிக்கப்பட்டது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ