பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ள ட்ரம்ப்..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், அவர் தனது உற்ற நண்பராக திகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், அவர் தனது உற்ற நண்பராக திகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உயரிய விருதை அளித்து கவுரவித்துள்ளார்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவை மேம்படுத்தியதற்காகவும் இந்தியா உலகளாவிய சக்தியாக உருவெடுக்கக் காரணமாக இருந்ததற்காவும், அமெரிக்க அரசின் "லிஜியன் ஆப் மெரிட்" (Legion of Merit) என்ற உயரிய விருது, பிரதமர் மோடிக்கு (PM Narendra Modi) வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் பிரையன் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இருநாடுகளின் உறவு மேம்பட முக்கிய காரணமாக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்த மதிப்பு மிக்க விருதை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) வழங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலுப்படும் என்று கூறப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதை, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர், தரண்ஜித் சிங் சாது, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரியனிடமிருந்து (Robert O'Brien) பெற்றுக் கொண்டார். “அமெரிக்க – இந்திய இடையிலான உறவை வலுப்படுத்திய காரணத்திற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு லீஜியன் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது’ என்று ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
இந்த விருதை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, இது இந்திய மற்றும் அமெரிக்க மக்களின் முயற்சிக்கான அங்கீகாரம் என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் ஒரு மினி இந்தியா: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR