உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அமெரிக்கா என்று பெருமை பேசும் காலம் போய்விட்டதோ என அஞ்சத் தோன்றுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்கா (America) என்பது தொழில்நுட்பத்தில் சிறந்த நாடு என்பது மாய பிம்பமோ... பில்டிங் ஸ்டார்ங் ...பேஸ்மெண்ட் வீக் என்ற கதையாக உள்ளது அமெரிக்காவின் நிலை.


 சமீபத்தில் நடந்துள்ள தேர்தலில், கல்லறைக்கு சென்றவர்கள் எல்லாம், அமெரிக்காவில் ஒட்டு போட்டு அதிசயம் படைத்துள்ளார்கள். குப்பைகளில் கொட்டிக் கிடக்கின்றன அஞ்சல் ஓட்டுகள். கைப்பற்றப்பட்ட ஓட்டுகள் அனைத்தும் ட்ரம்பிற்கான (Donald Trump) ஓட்டுகள் என்பது கூடுதல் தகவல். 


தேர்தல் நடந்து மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 


அது தவிர, பல மாகாணங்களின் பதிவான வாக்குக்களின் எண்ணிக்கையை விட, எண்ணப்பட்ட வாக்குகள் அதிகமாக இருப்பது இன்னும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. 


வளரும் நாடான இந்தியா வாக்குசீட்டு முறையில் இருந்து முன்னேறி, EVM பயன்படுத்தி. எலக்ட்ரானிக் முறையில் வாக்களிக்கும் முறையை பின்பற்றி, ஒரே நாளில், முடிவுகளும் தெரிகின்றன. 


எதிர் கட்சிகள் EVM முறைகேடுகள் நடப்பதாக கூறி வந்தாலும், அதை இன்னும் அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்பது தான் உண்மை நிலை. தேர்தல் ஆணையம் பல முறை அதற்கான சந்தர்ப்பதை வழங்கிய போதிலும் எவரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.


வாக்குசீட்டு பதிவின் காலத்தில், வாக்கு சாவடிகள் கைபற்றிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. மேற்கு வங்காளத்தில், கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், வாக்கு சாவடிகளுக்குள் புகுந்து, வாக்கு சீட்டுகளில் தாங்களே வாக்களித்துக் கொள்ளும் சம்பவம் எல்லாம் அரங்கேறியுள்ளன. 


இந்நிலையில் அமெரிக்க ஊடலவியலளர் லாரன்ஸ் செலின் என்பவர் ட்வீட் செய்து, தேர்தலை எப்படி நடத்துவது என இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார். 



130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஓவொருவருக்கும் தனிப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளது. தேர்தல் முடிவுகள் ஒரே நாளில் அறிவிக்கப்படுகின்றன.


ALSO READ | ‘ஜோ அதிபரானால் ஜாலிதான்’- மகிழிச்சியில் மிதக்கும் பாகிஸ்தான், காரணம் இதுதான்….


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR