தனது வாழ்கையை முடிவுக்கு கொண்டுவர NHRC-க்கு கடிதம் எழுதிய கான்ஸ்டபிள்!
போலீஸ் கான்ஸ்டபிள் தனது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளார்!
போலீஸ் கான்ஸ்டபிள் தனது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளார்!
உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட மற்றும் இருதய நோய்களால் பாதிக்கப்பட்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தனது வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் (NHRC) அனுமதி கோரியுள்ளார். ஏனெனில், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள இடத்திற்கு மாற்றுவதற்கான கோரிக்கையை அவரது துறை நிராகரித்ததுள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
கான்ஸ்டபிள் மகாவீர் சிங், எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்தவர், கடந்த மூன்று ஆண்டுகளாக இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு லேசான மாரடைப்பு கூட ஏற்பட்டுள்ளது. "நான் ஜெனரல் போலீஸ் (ஸ்தாபனம்), உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன், எனது வீட்டுக்கு அருகிலுள்ள மாவட்டங்களுக்கும் இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். இதனால், எனக்கு சரியான பராமரிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைக்கும்" என்று அவர் கூறினார். இருப்பினும் இவரது வேண்டுகோளுக்கு காவல் துறையிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
அமேதி போலீஸ் சூப்பிரண்டு கயாதி கார்க், இந்த விவகாரம் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டபோது, துறை மற்றும் மாநில அரசின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி சிங்கிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதியளித்தார். குறைந்த உழைப்பு மற்றும் மன அழுத்தம் தேவைப்படும் வேலைகள் அவருக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாகவும் கார்க் கூறினார்.