சீனியர் சிட்டிசன் விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் பென்சன்! எந்த மாநில அரசின் அறிவிப்பு இது?
UP Govt Pension Scheme To Farmers: 60 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்! பட்ஜெட்டில் அறிவிப்பு...
Farmers Pension Scheme: விவசாயிகளுக்காக ஓய்வூதிய திட்டம் ஒன்றை உத்தரப் பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சமர்ப்பித்த பட்ஜெட்டில், விவசாயிகளுக்கான பரிசாக இந்த பென்சன் திட்டத்தை வழங்கினார் நிதியமைச்சர். சீனியர் சிட்டிசன் விவசாயிகளுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் தருவதாக அரசு அறிவித்துள்ளது சாமானிய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்புத் திட்டத்தின்படி, 60 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். வயதான விவசாயிகள் தங்களுடைய ஓய்வுக் காலத்தில் பண தட்டுப்பாடு இல்லாமல் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் பிஎம் கிசான் திட்டம் மிக முக்கியமான ஒன்று. விவசாயத் துறையின் வளர்ச்சிக்காக 3 புதிய திட்டங்களைத் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும் உத்தரப் பிரதேச மாநில பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
ராஜ்ய கிரிஷி யோஜனா என்ற விவசாயத் திட்டத்துக்கு 200 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, கிராம பஞ்சாயத்துகளில் தானியங்கி வானிலை நிலையங்கள் மற்றும் தானியங்கி மழை அளவீடுகளை அமைப்பது தொடர்பான திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக யோகி அரசு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இன்னும் சில வாரங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில பட்ஜெட்களில் மகக்ளுக்கு பிடித்த மற்றும் பண பலன்களைக் கொடுக்கும் திட்டங்களை அறிவிப்பது இயல்பானதே. விவசாயிகளுக்கு இந்திய அரசாங்கம் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்கும் பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவித் திட்டம் அறிவிக்கப்பட்டது.
தற்போது 2024இல் பிரதமர் கிசான் திட்டத்தின் நிதி உதவி அதிகரிக்கலாம் என்றும் பல ஊகங்கள் உலா வருகின்றன. அதற்கு காரணம் தேர்தல் தான். பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2018 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு 6000 ரூபாய் தொகையை, அதாவது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற அளவில் 6000 ரூபாய் வழங்குகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் தவணை மூன்றிலிருந்து நான்றாக உயர்த்தப்படக்கூடும் என இணையதளங்களில் வெளியாகும் ஊகங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அரசு 1 தவணையை அதிகரித்தால், மாதத்திற்கு 2000 ரூபாய் என ஆண்டுக்கு 8000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ