உத்திர பிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அமர் சிங் காலமானதால் காலியான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் செப்டெம்பர் 11ம் தேதி நடைபெறும். அமர்சிங் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் அமர் சிங் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த மாநிலங்களவை தொகுதிக்கான தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.


இதற்கான அறிவிக்கை தேதி ஆகஸ்ட் 25ம் தேதி எனவும், வாக்குப்பதிவுக்கான தேதி செப்டம்பர் 11 எனவும் தேதல் ஆணையம் தெரிவித்துள்ளது.


அமர் சிங் நீண்டகாலமாக இருந்த உடல்நலக்குறைவால் ஆகஸ்ட் 1 அன்று காலமானார். அவரது பதவிக்காலம் ஜூலை 2022 இல் முடிவடைவதாக இருந்தது. அவர் சமாஜ்வாடி கட்சி  சார்பாக மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் பின்னர் பாஜகவுடன் இணைந்தார்.


இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்புள்ளது. அதனால், பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | மும்பையில் லால்பாக்சா ராஜா இல்லாத விநாயகர் சதுர்த்தி... 86 ஆண்டுகளில் முதல் முறை..!!!


சமாஜ்வாதி கட்சித் தலைவர் பெனி பிரசாத் வர்மாவின் மரணத்தால்  காலியான மாநிலங்கள் அவை தொகுதிக்கு நடந்த சமீபத்திய இடைத்தேர்தலில், பாஜக வேட்பாளர் ஜெய் பிரகாஷ் நிஷாத் உத்தரபிரதேசத்தில் இருந்து திங்கள்கிழமை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இடைத்தேர்தலுக்கான வேட்புமனுவை நிஷாத் மட்டுமே தக்கல் செய்திருந்தார். வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான கடைசி தேதி திங்கள் என இருந்த நிலையில்,  வேறு எவரும் தாக்கம் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மேலும் படிக்க | வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்: உச்சநீதிமன்றம்