உத்திராகண்ட் மாநிலத்தின் நைனிடால், அல்மோரா, தெஹ்ரி கர்வால் மற்றும் பவுரி கர்வால் ஆகிய நான்கு மாவட்டங்களில் 40 இடங்களில் காட்டுத் தீ பரவி வருவதாக உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த நெருக்கடி குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளின் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை நடத்திய பின்னர் முதலமைச்சரின் அறிக்கை வெளிவந்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீயணைப்பு பணியில் சுமார் 12,000 வனத் தொழிலாளர்கள், 1,300 தீயணைப்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும், தீயை அணைக்க மத்திய அரசு மாநிலத்திற்கு இரண்டு ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளதாகவும் ராவத் தெரிவித்தார்.


முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) ட்வீட் செய்து, காட்டுத் தீயைச் கட்டுப்படுத்த தேசிய பேரிடர் நடவடிக்கை குழு மற்றும் ஹெலிகாப்டர்களை அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்று கூறினார்.


வழக்கமாக  மே மற்றும் ஜூன் மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் போது தான் காட்டுத் தீ ஏற்படும் ஆனால்,  இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தீ பரவத் தொடங்கியது என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர்.


கடந்த ஆண்டு, காட்டுத் தீ காரணமாக 172 ஹெக்டேர் வன நிலங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், ​​இந்த ஆண்டு இப்போதே, 1,290 ஹெக்டேர் வன நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்த தீ காரணமாக 4 பேரும்,  ஏழு விலங்குகளும் இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.


கடந்த ஆண்டு குளிர்காலத்தில் பெய்த குறைவான மழை மற்றும் கொரோனா வைரஸ் காரணமாக காடுகளில் மனித இயக்கம் இல்லாதது காட்டுத் தீக்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காடுகளில்  மனித நடமாட்டம்  இருக்கும் போது, எளிதில் தீ பிடிக்கும்  காயந்த மர இலைகள் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும் என அதிகாரிகள் கூறினர்.  எளிதில் தீ பிடிக்கக் கூடிய பைன் மரக்களைகள், இலைகள் சேர்த்து தீப்பிடித்துள்ளன என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.


ALSO READ | சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்; 22 பேர் பலி, குடியரசுத் தலைவர் கண்டனம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR