உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஜோஷிமாத்தில் பனிப்பாறை உடைந்தபின் உத்தரகண்ட்டில் தீவிர எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரை 150 பேரை காணவில்லை. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உடைந்து,  தவுலி கங்கா ஆற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, "உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்தியா உத்தரகண்ட் உடன் ஆதரவாக நிற்கிறது, அனைவரின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்கிறது" என்றார்.


"வெள்ள நிலைமை குறித்து மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாக கூறிய அவர், தேசிய பேரிடர் நடவடிக்கை குழு NDRF மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளின் ஈடுபடுத்தப்பட்டுள்ளது" என்று பிரதமர் மோடி (PM Narendra Modi) ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக NDRF குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில்  கூடுதல் துருப்புக்கள் டெல்லியில் இருந்து விமானம் கொண்டு அனுப்பப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.


 "உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரழிவு குறித்து மாநில முதல்வர் டி.எஸ். ராவத், ஐ.டி.பி.பி மற்றும் என்.டி.ஆர்.எஃப் குழுவுடன் பேசி வருகிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் "


உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் ஒரு பனிப்பாறை உடைந்து, உத்தரகண்ட் மாநிலத்தின் தவுலி கங்கா ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் கரையில் வாழும் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.


ஜோஷிமாத்தில் பனிப்பாறை உடைந்ததை அடுத்து உத்தரபிரதேச அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். கங்கை நதியின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்குமாறு மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்டுள்ளது.


உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், மொத்தம் நான்கு NDRF குழுக்கள் (சுமார் 200 பணியாளர்கள்) டெஹ்ராடூனுக்கு விமானம் அனுப்பப்பட்டு வருகின்றன, அவை ஜோஷிமத்தை சென்றடையும்.


ரிஷி கங்கா மின் திட்டத்தில் பணிபுரியும் 150 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மாநில பேரிடர் பதிலளிப்பு படை டி.ஐ.ஜி ரிதிம் அகர்வால் செய்தி நிறுவனமான பி.டி.ஐ- இடம் தெரிவித்துள்ளார்.


ALSO READ | 'Made in India' கோவிட் -19 தடுப்பூசிக்காக 25 நாடுகள் காத்திருக்கின்றன: S.ஜெய்சங்கர்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR