முதல் சுதேச தடுப்பூசி 'நுமோசில்' இந்தியா அறிமுகப்படுத்துகிறது, இது நோய் தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் என கூறப்படுகிறது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைவரின் கண்களும் கொரோனா தடுப்பூசிக்காக (CORONAVIRUS VACCINE) காத்திருக்கின்றன. ஒருபக்கம் மக்கள் குளிர்கால இரவுகளையும், மற்றொரு பக்கம் கொரோனா வைரஸின் பயத்துடன் தங்களின் ஒவ்வொரு நாளையும் பயத்துடன் சமாளித்து வருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், கொரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. 


இந்நிலையில், நிமோனியா தடுப்பூசி (Pneumosil vaccine) உருவாக்கும் விஷயத்தில் இந்தியா வெற்றியின் அடையாளத்தை எழுதியுள்ளது. புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) இந்தியாவின் முதல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நிமோகோகல் தடுப்பூசி நியூமோசில் ஒன்றை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும் கலந்து கொண்டார். சீரம் நிறுவனம் அதை அவர் முன்னிலையில் அறிமுகப்படுத்தியது. 


10 வருட கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது


சீரம் நிறுவனம், PATH மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து ஒரு தசாப்தத்திற்கும் மேலாக (10 ஆண்டுகள்) நுமோசில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது, இது நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசி வலிமையை மேம்படுத்துவதோடு குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு நிலையான அணுகலை உதவும். இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு நிமோகோகல் நோய்களுக்கு (நிமோனியா) பயனுள்ள மற்றும் நீண்டகால பாதுகாப்பை வழங்கும்.


ALSO READ | Alart.. ATM-யில் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்; இனி இதை செய்தால் அபராதம் விதிக்கப்படும்.!


சுகாதார அமைச்சர் பாராட்டு


இந்நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷ் வர்தன், இது நாட்டின் பொது சுகாதாரத்துக்கான ஒரு முக்கியமான மைல்கல்லாகும், இது குழந்தைகள் மலிவு மற்றும் உயர்தர தடுப்பூசி மூலம் நிமோகோகல் நோயிலிருந்து சிறந்த முறையில் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று கூறினார். 



சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாப்பு


நுமோசில் அறிமுகம் குறித்து, சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா கூறுகையில், பல ஆண்டுகளாக, வழக்கமான பொருட்களுடன் உயர்தர தடுப்பூசிகளை வழங்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சி, இது உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்கிறது. குழந்தைகளை நிமோகோகல் நோயிலிருந்து பாதுகாக்க இது ஒரு சிறந்த வழி என்று அவர் கூறினார்.



ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வரம் பெறுவார்கள்


இந்த நோயால், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது என்று ஆதர் பூனாவாலா கூறினார். 2018 ஆம் ஆண்டில், ஐந்து வயதுக்குட்பட்ட 67,800 குழந்தைகள் இறந்தனர். அத்தகைய குழந்தைகளை காப்பாற்ற இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும். சீரம் நிறுவனம் இந்தியாவில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா COVID-19 தடுப்பூசியை பரிசோதித்து தயாரிக்கும் மருந்து நிறுவனம் ஆகும்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR