உலகின் பல நாடுகளில் Mpox என்னும் குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை 4 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட சக்திவாய்ந்த நபர்களிடமிருந்து தடுப்பூசி வழங்கல் குறித்து தொடர்ச்சியாக பூனாவாலாவுக்கு அளிக்கப்பட்ட அழுத்தம் காரணமாக பூனாவாலா இங்கிலாந்துக்கு சென்றதாக மானே ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
சீரம் இன்ஸ்டிடியூட்டின் உற்பத்தித் திறன் ஆறு மாதங்களுக்குள் ஆண்டுக்கு 250 கோடி என்ற அளவிலிருந்து 300 கோடி அளவிற்கு உயர்த்தப்படும் என்று அதார் பூனவல்லா கூறியிருந்தார்.
தற்போது லண்டனில் உள்ள சீரம் நிறுவன தலைவர், இந்தியாவில் பலரிடம் இருந்து மிரட்டல்கள் வருகிறது என்பதால், சில காலம் லண்டனிலேயே தங்கி இருக்க முடிவு செய்துள்ளேன் என சில நாட்களுக்கு முன் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. திங்களன்று (மே 3, 2021) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) புதன்கிழமை (ஏப்ரல் 21) தனது தடுப்பூசி கோவிஷீல்டு ஒரு டோஸ் மாநில அரசுகளுக்கு ரூ. 400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸ் ரூ .600 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து "கோவோவேக்ஸ்" (Covovax) என்ற கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
தனது பாராட்டுக்களை வெளிப்படுத்திய கனேடிய பிரதமர், உலகம் COVID-19-க்கு எதிரான போரில் வெற்றி பெற்றால், அதற்கு இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருத்துவ திறன் ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கும். அந்த திறனின் பயன்களை உலகுடன் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடிக்கும் அதில் ஒரு பெரிய பங்கு இருக்கும் என்று கூறினார்.
சீன அரசாங்க ஆதரவுடைய ஹேக்கர்கள் குழு பாரம் பயோடெக்கிலிருந்து (Bharat Biotech) சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (Serum Institute of India) மற்றும் கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) ஆகியவற்றின் சூத்திரங்களைத் திருட முயன்றது.
இந்தியா ஏற்கனவே 229 லட்சம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பல்வேறு நாடுகளுக்கு வழங்கியுள்ளது, அதில் 64 லட்சம் டோஸ் மானிய உதவியாகவும், வர்த்தக அடிப்படையில் 165 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் பிப்ரவரி 12 அன்று தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கான கோவிஷீல்ட் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சேமிக்கப்படும் கிடங்கு இந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்று SII நிர்வாக இயக்குனர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்தார்.
மக்களுக்கு மேலும் நிம்மதி அளிக்கும் வகையில், மேலும் நான்கு கொரோனா தடுப்பூசிகள் விரைவில் இந்தியாவிற்கு கிடைக்கும் என, சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 16 முதல் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி போடும் பணியை தொடங்க இந்தியா தயாராகி வரும் நிலையில், இந்த தடுப்பூசி இந்தியாவில் ₹ 200 என்ற விலையில் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.