பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் வெங்கையா நாயுடு? - சற்று நேரத்தில் வெளியாகிறது அறிவிப்பு
Presidential polls : குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தற்போதைய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிப்பதற்காக ஆலோசித்து வருகின்றன. இதற்காக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரை எதிர்க்கட்சிகள் அணுகின. ஆனால், மூவருமே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டனர்.
மேலும் படிக்க | மகாத்மா காந்தியின் பேரனை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பரிந்துரைக்கும் இடதுசாரிகள்
இதனைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்படக் கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எனக்கு வழங்கிய மரியாதைக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தற்போது தேசிய நோக்கத்துக்காக நான் கட்சியிலிருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்காக உழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூழலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்காக பாஜக நாடாளுமன்ற உயர்மட்டக் குழு இன்று கூடுகிறது. இதற்கு முன்னதாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்துப் பேசினர்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினருடன் பேச ராஜ்நாத் சிங், ஜே.பி. நட்டா ஆகியோருக்கு கட்சி அதிகாரம் அளித்துள்ளது. எனவே உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு முன்னதாக நிகழ்ந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 48% வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மம்தாவின் கூட்டத்தைப் புறக்கணித்த சந்திர சேகர ராவ்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR