பிரபல எழுத்தாளர் குல்தீப் நாயர் வயது 95 டெல்லியில் உடல்நல குறைவால் காலமானார்...!  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான 95 வயதுடைய குல்தீப் நாயர் நேற்றிரவு டெல்லியில் காலமானார். 


1924 ஆம் ஆண்டு பஞ்சாப் அருகேயுள்ள சியால்கோட் பகுதியில் பிறந்த குல்தீப் நாயர், பத்திரிக்கையாளர், தூதர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் எழுத்தாளர் என பன்முகத்தன்மை பெற்று விளங்கியவர். இவர் 11 புத்தகங்களை எழுதியுள்ளார். 'எல்லைகளுக்கு இடையே', 'தூரத்து உறவினர்கள்: துணைக் கண்டத்தின் கதை', 'நேருவுக்குப் பிறகு இந்தியா' மற்றும் 'ஸ்கூப்' போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள். 


மேலும், அவர் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.யான குல்தீப் நாயர் ஐ.நா.வில் இந்திய பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். குல்தீப் நாயர் முதுமை காரணமான உடல் நல குறைவால் இன்று காலமானார். குல்தீப் நாயரின் இறுதிச்சடங்கு லோதி சாலை சுடுகாட்டில் நடைபெறும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.