மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத் மலானி உடல்நலக்குறைவால் காலமானார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத் மலானி ஞாயிறு காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95.


உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த இரண்டு வாரங்களாக மருத்து கண்காணிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தனது கடைசி காலத்தில் தனது மகன் மகேஷ்ஜெத் மலானி, மற்றும் அமெரிக்கவில் வாழும் மகள் இருவரின் உதவியில் வாழ்ந்து வந்தார். 



செப்டம்பர் 14, 1923-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு உட்பட்ட சிக்காப்பூர் பகுதியில் ராம் போல்சந்த் ஜெத்மலானி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், சட்ட துறையில் தனது பெயரினை பலமாக பதித்துள்ளார். உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் குறிப்பிடத்தக்க வழக்குகளில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு பெற்றமை, இவரது பெயரினை நாடு அறிய செய்துள்ளது.


1959-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் வழக்கறிஞராக தனது பணியை துவங்கிய ஜெத் மலானி குறிப்பிடத்தக்க பல வழக்குகளில் தனது வாத திறமையினை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனது வாத திறமையினை வெளிப்படுத்தியது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்தது. அதேப்போல், பங்குச் சந்தை மோசடி வழக்கில் ஹர்ஷத் மேத்தா மற்றும் கேதன் பரேக் ஆகியோரை ஆதரித்தது, அப்சல் குருவுக்கு மரண தண்டனையை ஆதரித்தது, ஜெசிகா லால் கொலை வழக்கில் மனு சர்மாவை பிரதிநிதித்துவப்படுத்தியது என பல முக்கிய வழக்குகளில் தனது வாத திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.


பின்னர், 2010-ல் உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அரசியல் துறையினை பொறுத்தவரையில்., 6-வது மற்றும் 7-வது மக்களவையில் மும்பையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் மத்திய சட்ட துறை அமைச்சராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.