குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
புதுடெல்லி: இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.
கொரோனா தொற்று உறுதியானதால், வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெங்கய்யா நாயுடுவுக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை, அவர் நல்ல உடல்நலத்துடன் தான் இருந்தார். தற்போது கிடைத்த தகவல்களின் படி, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவின் மனைவி உஷா வெங்கய்யா நாயுடுவுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு தொற்று ஏற்படவில்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 நோய்க்காக இந்தியாவில் 11,42,811 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தியாவில் இதுவரை 51,01,397 பேர் கோவிட் 19 நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 84,877 பேர் குணமடைந்துள்ளதாக, மத்திய குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப் படைத்துவரும் வேளையில், உலகமே இந்த நோய்க்கு முன்னால் மண்டியிட்டிருப்பது போல் தோன்றுகிறது. கொரோனாவில் இருந்து உலகம் முழுமையாக நிவாரணம் பெற எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.
இந்த செய்தியை தவறவிடாதீர்கள் | Maharashtra: COVID-ஐ வென்று வீடு திரும்பிய 106 வயது மூதாட்டி