ஹரியானாவின் ரிவாரி கூட்டு பலாத்காரம் வழக்கில் நீதி வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹரியானாவின் ரிவாரி பகுதியை சேர்ந்த 19-வயது கல்லூரி மாணவி கடந்த விழாயன் அன்று பலவந்தமாக கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவத்தன்று மாலை பாதிக்கப்பட்ட பெண் தனது பயிற்சி வகுப்புக்குச் சென்று வீடு திரும்பினார், அப்போது அவ்வழியாக வந்த காரில் இருந்த சிலர் அச்சிறுமியை கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் தெரிகிறது. பின்னர் கனினா என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் அச்சிறுமியை காரிலிருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.



இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளிக்க முயன்றுள்ளனர், எனினும் காவல்துறையினர் இந்த புகாரை ஏற்க மறுத்துள்ளது. இதனையடுத்து அவர் நேரடியாக காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். எனினும் இந்த வழக்கில் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏதும் நிகழவில்லை, நேற்றைய தினம் காவல்துறை அதகாரிகள் இவ்வழக்கில் தொடர்புடையவர்களாக 3 பேரது புகைப்படங்களை வெளியிட்டனர்.


இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவிக்கையில்... இந்த வழக்கில் காவல்துறை ஆர்வம் காட்டவில்லை, இதன் காரணமாக தான் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. என் மகளுக்கு நீதி வேண்டும், ஆனால் நேற்று சிலர் என் வீடு தேடி வந்து வெத்து காசோலைகளை வழுங்குகின்றனர். எனக்கு நீதி மட்டுமே வேண்டும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென வேண்டிக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.