லக்னோ: கேங்க்ஸ்டர் விகாஸ் துபேயின் (Vikas Dubey) தாய் தனது இளைய மகனிடம் காவல்துறையிடம் சரணடையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இல்லையெனில் அவரும், அவரது குடும்பத்தினரும் கொல்லப்படுவார்கள் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது மற்றொரு மகனான தீப் பிரகாஷ் துபேக்கு (Deep Prakash Dubey), அவரது தாய் சர்லா தேவி எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.  ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் நடந்த மோதலில் போலீஸ்காரர்களைக் சுட்டுக்கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ரவுடி விகாஸ் துபே ஜூலை 10 ம் தேதி உத்தரபிரதேச காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


துபேயின் தம்பி இன்னும் தலைமறைவாக தான் இருக்கிறார். அவரை இன்னும் போலீசார் தேடி வருகின்றனர். ஜூலை 3 ம் தேதி பிக்ரு கிராமத்தில் பதுங்கியிருந்ததைத் தொடர்ந்து, கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த தாக்குதலில் எட்டு போலீஸ் பணியாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு பொதுமக்கள் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.


ALSO READ | 'விகாசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’: கான்பூர் வர மறுத்த விகாசின் தாய்


தலைமறைவாக இருக்கும் தனது இளைய மகன் தீப் பிரகாஷிடம், தயவுசெய்து முன் வந்து சரணடையுங்கள், இல்லையென்றால் போலீசார் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கொன்றுவிடுவார்கள்" என்று அவரது தாயார் சர்லா தேவி மேற்கோள் காட்டினார்.


நீங்கள் சரணடைந்தால் காவல்துறையினர் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். நீங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. உங்கள் சகோதரருடனான உங்கள் உறவின் காரணமாக நீங்கள் பயந்து தலைமறைவாக இருக்கிறீகள். சரணடையுங்கள்" என்று அவர் மேலும் கூறினார்.


தனது மூத்த மகனின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள சர்லா தேவி மறுத்துவிட்டார். அவருடன் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.


போலீஸ் என்கவுண்டரில் ரவுடி விகாஸ் துபே கொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்பு, எட்டு போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்ற தனது மகன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டாலும் தனக்கு எந்த வருத்தமும் இருக்காது என்று தேவி கூறியிருந்தார்.


ALSO READ | கான்பூரில் என்கவுண்டர் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே… நடந்தது என்ன…


விகாஸ் துபே சிறு வயதிலிருந்தே குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்களின் பலமுறை கோரிக்கைகள் இருந்தபோதிலும் தனது பாதையை மாற்றவில்லை என்றும் தேவி கூறியிருந்தார்.