கான்பூரில் என்கவுண்டர் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே… நடந்தது என்ன…

கான்பூரில் நடந்த என்கவுண்டர் ஒன்றில்,  உத்தரப்பிரதேசத்தின் குண்டரான விகாஸ் துபே கொல்லப்பட்டான்.

Last Updated : Jul 10, 2020, 12:25 PM IST
  • என்கவுண்டரில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
  • ரவுடி விகாஸ் துபே மீது கொலை உட்பட கிட்டத்தட்ட 60 வழக்குகள் உள்ளன
  • 2001 ஆம் ஆண்டில், ஒரு பாஜக தலைவரை ஒரு காவல் நிலையத்தில் கொலை செய்ததாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது
கான்பூரில் என்கவுண்டர் ஒன்றில்  சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபே… நடந்தது என்ன… title=

கான்பூரில் நடந்த என்கவுன்டர் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கேங்க்ஸ்டர் விகாஸ் துபே, வெள்ளிக்கிழமை (ஜூலை 10) காலை உத்தரபிரதேச சிறப்பு பணிக்குழு (STF) உடன்  ஏற்பட்ட போலீஸ் எண்கவுண்டரில் கொல்லப்பட்டான்.

கான்பூர் (Kanpur): கான்பூரில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10, 2020) உத்தரபிரதேச சிறப்பு பணிக்குழு (STF),  தப்பி ஓட முயன்ற ரவுடி விகாஸ் துபேயை கொலை செய்தது. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனிலிருந்து கான்பூருக்கு வாகனத்தில் அவனை அழைத்து சென்ற போது,  உ.பி. STF வாகனம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து விகாஸ் துபே தப்பிக்க முயன்றான்.

விபத்துக்குப் பின்னர் போலீஸார் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியுடன் தப்பி ஓட முயன்ற விகாஸ் துபேவை உ.பி. STF காவலர்கள் துரத்தினர். துப்பாக்கி சண்டை மூண்டது. அந்த துப்பாக்கி சண்டையில் விகாஸ் துபே கொல்லப்பட்டான். துபே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், அங்கு அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

ALSO READ | லக்னோவில் ரவுடி விகாஸ் துபேயின் மனைவி, மகன் மற்றும் வேலைக்காரனை கைது செய்த போலிசார்

 

"சாலை விபத்துக்குப் பின்னர் தப்பி ஓட முயன்றபோது Gangster விகாஸ் துபே ஒரு என்கவுண்டரில் கொல்லப்பட்டார்" என்று கான்பூர் IG மோஹித் அகர்வால் கூறினார். இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் (Uttar Pradesh Chief Minister Yogi Adityanath ) இன்று செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றவுள்ளார்.

இந்த என்கவுண்டரில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உட்பட நான்கு போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ALSO READ | COVID-19 நோயாளி வெளியிட்ட பரபரப்பு வீடியோவினால், ஏற்பட்ட சிக்கல்…!!!

எண்கவுண்டரில் நடந்தது என்ன…

உஜ்ஜைனிலிருந்து கான்பூருக்கு ஒரு உ.பி. STF வாகனம் சென்றது.

ரவுடி விகாஸ் துப்பே ஏற்றிச் சென்ற இந்த வாகனம், காலை 7 மணியளவில், கான்பூரில் உள்ள பார்ரா அருகே கவிழ்ந்தது.

அப்போது காவல்துறையினரிடமிருந்து ஆயுதங்களை பறித்துக் கொண்டு, தப்பி ஓட ரவுடி விகாஸ் துபே முயன்றான்.

மேலும் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினான்.

STF அவனை சரணடைய வைக்க முயற்சித்தது.

STF தற்காப்புக்காக ரவுடி விகாஸ் துபே  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரவுடி விகாஸ் துபே கொல்லப்பட்டான்.

உத்தரபிரதேச சிறப்பு நடவடிக்கைகுழுவின் (STF) 12 கார்கள், வெள்ளிக்கிழமை காலை, ரவுடி துபேயை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனிலிருந்து கான்பூருக்கு அழைத்து வந்தது. கான்பூரில் உள்ள பார்ரா அருகே அதன் கார் ஒன்று கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடந்தது.

ALSO READ | தலைநகரை கலக்கும் கபசுர குடிநீர்: சித்த மருத்துவத்துக்கு அதிகரிக்கும் மவுசு

முன்னதாக, ஜூலை 3ம் தேதி கான்பூரின் சவுபேபூர் பகுதியில் உள்ள பிக்ரு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அவனை கைது செய்ய ஒரு போலீஸ் குழு, சென்றனர். ஆனால், அவன் போலீஸாரிடம் அகப்படாமல் தப்பிக் கொண்டிருந்தான்.  அவனை கைது செய்ய தகவல் அளிப்பவருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த ரவுடி கும்பல், வீட்டின் கூரைகளில் இருந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எட்டு போலீசார் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

ரவுடி விகாஸ் துபே மீது கொலை உட்பட கிட்டத்தட்ட 60 வழக்குகள் உள்ளன. 2001 ஆம் ஆண்டில், ஒரு பாஜக தலைவரை ஒரு காவல் நிலையத்தில் கொலை செய்ததாக அவன் மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால் ஆதாரங்கள் இல்லாததால் அவன் விடுவிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News