தேர்வு எழுத வந்த தாயின் குழந்ந்தையை அழாமல் பார்த்துக்கொண்ட தெலுங்கான காவலர் குறித்த செய்தி தற்போது வைரலாகி வருகின்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெலுங்கானாவின் மெஹபூப் நகரில் உள்ள Boys Junior College-ல் SCTPC தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்விற்கு கை குழந்தையுடன் வந்த தாய் ஒருவர் தனது குழந்தையினை தேர்வு மைய காவல்அதிகாரியாக வந்த தலைமை காவலர் முஜீப் உர் ரஹூமான் என்பவரிடன் கொடுத்து சென்றுள்ளார்.


பணியில் இருந்து காவலர், தன் பராமரிப்பில் எடுத்துக்கொண்ட குழந்தை அழாமல் இருக்க குழந்தையிடம் கொஞ்சி விளையாடி குஷி படுத்தியுள்ளார். இச்சம்பவம் அனைவரைது பாராட்டுதலையும் பெற்று வருகின்றது.



இச்சம்பவம் குறித்து IPS அதிகாரி ரேமா ராஜேஸ்வரி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். 


நேற்றைய தினம் நடைப்பெற்ற இந்த தேர்விற்கு, தேர்வு மைய காவல் அதிகாரியாக முஜீப் உர் ரஹூமான் வந்துள்ளார். இவர் தற்போது மோசாப்பெட் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருப்பது குறிப்பிடத்துக்கது.