Viral Video: மகனுக்கு ஜாமீன் வேணும்னா மசாஜ் செய்யனும்... பீகாரில் தாயிடம் எல்லை மீறிய போலீஸ்...
பீகாரில் சிறையில் உள்ள மகனை விடுவிக்க தாயை மசாஜ் செய்ய சொன்ன காவல் அதிகாரியின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டத்தில் உள்ள ரவுஹட்டா பகுதியில் குற்றச்செயலில் ஈடுபட்டதால் இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த தகவல் அறிந்த இளைஞரின் தாய் மகனுக்கு ஜாமீன் கோரி மனுவுடன் ரவுஹட்டா காவல்நிலையத்திற்கு சென்றார்.
அப்போது காவல்நிலையத்தில் இருந்த ஷாஷி பூஷன் சின்ஹா எனும் உதவி காவல் ஆய்வாளர், மகனுக்கு ஜாமீன் வேண்டும் என்றால் தனக்கு மசாஜ் செய்துவிட வேண்டும் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதற்கு அந்த பெண்மணியும் சம்மதித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து அறை ஒன்றில் அரை நிர்வாணத்துடன் அமர்ந்திருக்கும் ஷாஷி பூஷன் சின்ஹாவுக்கு அந்த பெண் மசாஜ் செய்துவிடுவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதில், கைது செய்யப்பட்ட இளைஞரின் தாய் மிகவும் ஏழ்மையானவர். அவரிடம் ரூ.10,000 மட்டுமே பணம் உள்ளது. இதை வைத்துக்கொண்டு இளைஞருக்கு ஜாமீன் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். வழக்கின் முதல் தகவல் அறிக்கையை திங்கள் கிழமை அனுப்பி வைக்கின்றேன் என வழக்கறிஞர் ஒருவரிடம் ஷாஷி பூஷன் சின்ஹா பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் படிக்க | துணை சப்-இன்ஸ்பெக்ட்டருக்கு மசாஜ் செய்து விடும் பெண் போலீஸ்: வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள சஹர்சா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லிபி சிங் உத்தரவிட்டார். விசாரணையில் இந்த சம்பவம் ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஷாஷி பூஷன் சின்ஹா உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஷாஷி பூஷன் சின்ஹா மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் லிபி சிங் தெரிவித்துள்ளார். மகனுக்கு ஜாமீன் கோரி சென்ற தாயை மசாஜ் செய்துவிட சொன்ன காவல் அதிகாரியின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | வீடியோ: போலீஸ்க்கு மசாஜ் செய்வது நபர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe