புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை சேவாக் இன்டர்நேஷனல் பள்ளி முழுமையாக பொறுப்பேற்கும் என கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன் தினம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தின் அவந்திப்பூரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரம்பிய காரினை கொண்டு வந்து CRPF வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் மத்திய சேமக் காவல் படையை சேர்ந்த 44 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இந்த துயர தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், துயரத்தையும், வேதனையையும் ஏற்ப்படுத்தி உள்ளது. கொல்லப்பட்ட வீரர்களில் இருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் இழப்பீட்டு தொகை வழங்கி வருகின்றன. இதை தொடர்ந்து, இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் தானே ஏற்பதாகவும் அவர்களை தான் நடத்தி வரும் சர்வதேச சேவாக் பள்ளியில் படிக்க வைப்பதாகவும் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும் வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது என குறிப்பிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியலையும் சேவாக் வெளியிட்டுள்ளார்.