புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜெனரல் கியுமர் ஜாவேத் பாஜ்வா (Qamar Javed Bajwa) சமீபத்தில் போர் குறித்து எச்சரிக்கும் வகையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது கடைசி குண்டும், கடைசி மூச்சும் உள்ளவரை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து போராடும் என்று பஜ்வா கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த முன்னாள் ராணுவத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங், ",முதலில் உங்களை நாட்டை கவனியுங்கள். பின்னர் போர் குறித்து பேசலாம் என பாகிஸ்தான் ராணுவ தலைமை ஜெனரலின் பேச்சுக்கு பதிலடி தந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"காஷ்மீர் என்ற பெயரில் பாகிஸ்தான் இராணுவம் ஊழல் செய்கிறது. காஷ்மீர் இல்லை என்றால் அது எங்கே போகும்?" "பஜ்வா அவர்களே முதலில் உங்கள் நாட்டின் நிலைமை மற்றும் உங்கள் இராணுவத்தின் நிலையைப் பாருங்கள், பின்னர் போரைப் பற்றி பேசுங்கள். பாகிஸ்தானில் உண்பதற்கு உணவு இல்லை. நிர்வாகத்திற்கு செலவு செய்ய பணம் இல்லை. ஆனால் பேச்சு மட்டும் பெரிதாக இருக்கிறது என்று கடுமையாக சாடி பேசியுள்ளார். மேலும் பயங்கரவாதிகளின் ஊடுருவல் குறித்து பேசிய சிங், "இது அவர்களின் வேலை, அவர்களை சொர்க்கத்திற்கு அனுப்புவது எங்கள் வேலை" என்றார்.


சிதம்பரம் கைது குறித்து பேசிய சிங், "சட்டம் தனது கடமையை செய்யும் என்று மோடி ஜி தெளிவாகக் கூறியுள்ளார். சட்டம் தனது கடமையை செய்து வருகிறது. சிபிஐ அமைப்பை பொறுத்த வரை "நீங்கள் தவறு செய்திருந்தால், அது உங்களுக்கு எதிராக செய்யப்படும்" என்றார்.


சந்திரயன் -2 குறித்து சிங் கூறுகையில், "இது ஒரு பெரிய சாதனை மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். உலகின் தலைவராக மாற இந்தியா கடுமையாக உழைத்து வருகிறது, நாம் தோளோடு தோள் கொடுத்தால் இந்தியா முன்னேறும்" என்றார். 


மேலும் மோட்டார் வாகனச் சட்டம் குறித்து பேசிய அவர், "ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் பலியாகிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்தச் சட்டம் வந்துள்ளது. எனது காருக்கு அபாரதம் உள்ளது. சட்டம் அனைவருக்கும் சமம்" என்று கூறினார்.