பண்டிகை காலங்களில் பயங்கரவாதிகளால் பாதிப்பு! பாதுகாப்பை பலப்படுத்தும் அரசு!
பொதுவாக பயங்கரவாதிகள் மக்கள் அதிகமாக கூடும் நேரங்களான பண்டிகை காலக்கட்டங்களிலேயே அதிகமாக தாக்குதல்களை நடத்துவது வழக்கம்.அதனால் பண்டிகை என்றாலே பாதுகாப்பும் பலப்படுத்தப்படும்.
டெல்லி : பொதுவாக பயங்கரவாதிகள் மக்கள் அதிகமாக கூடும் நேரங்களான பண்டிகை காலக்கட்டங்களிலேயே அதிகமாக தாக்குதல்களை நடத்துவது வழக்கம்.அதனால் பண்டிகை என்றாலே பாதுகாப்பும் பலப்படுத்தப்படும்.
அதுசமயம் தற்போது நாடு முழுவதும் ஆயுதபூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. இதனால் மக்கள் கூட்டம் அதிகரிப்பதால்,பயங்கரவாதிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளக்கூடும். இந்நிலையில், வரவிருக்கும் பண்டிகை காலங்களை முன்னிட்டு டெல்லியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என டெல்லி போலீசாருக்கு உளவுத்துறை தகவல் அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து டெல்லி காவல் ஆணையாளர் ராகேஷ் ஆஸ்தானா தலைமையில் உயரதிகாரிகள் கூட்டம் போட்டு ஆலோசனை மேற்கொண்டனர். அதில் அவர் கூறும்போது, உள்ளூர் குற்றவாளிகள், கும்பல்கள் மற்றும் சமூக விரோத கும்பல்களின் உதவியின்றி கண்டிப்பாக பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்த இயலாது என கூறியுள்ளார்.
இதனை தடுக்கும் பொருட்டு ரசாயன பொருள் விற்பனை கடை, வாகன நிறுத்தங்கள், பழைய பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கார் டீலர்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுவதுடன், கண்காணிக்கப்படவும் கூடும்.
மேலும்,பெட்ரோல் பம்புகள் உள்ளிட்டவை தாக்குதலுக்கான இலக்காக கொள்ளப்படும் என தெரிய வந்துள்ளது.இதனால், வாடகைக்கு இருப்போர், பணியாளர்களை சோதனை செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ALSO READ அக்டோபர் 3 முதல் 9 வரை லக்கிம்பூர் கெரியில் என்ன நடந்தது? முழுக்கதை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR