சமீபத்தில், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் 41 வயதான ஆண் ஒருவர், மது அருந்திவிட்டு இரண்டு வயாகரா மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு குறித்து மருத்துவ பத்திரிகை ஆய்வு மேற்கொண்டு அதை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் அவரது உயிரிழந்ததற்கான காரணம் குறித்து முழு தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வயாகரா என்ற பிராண்டின் கீழ் விற்கப்படும் சில்டெனாஃபில் என்ற இரண்டு, 50 மில்லி கிராம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டபோது, அந்த நபர் ஒரு பெண்ணுடன் இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. அந்த நபருக்கு கடந்தகாலத்தில் எவ்வித உடல்நிலை குறைப்பாடும் இல்லை. ஆனால் அவர் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டபோது மது அருந்தியிருந்தது உறுதியாகியுள்ளது.


மாத்திரையை எடுத்துக்கொண்ட அடுத்த நாள், அந்த நபர் சிறிது அசௌகரியமாக உணர்ந்துள்ளார். ஆனால், அவர் அதை பொருட்படுத்தவில்லை. அவர் வாந்தி எடுத்துள்ளார். மேலும் அவரது பெண் தோழி, மருத்துவ உதவியை நாடுமாறு அவரை வற்புறுத்தினார்.


மேலும் படிக்க |  உடல் எடை குறையணுமா? இதை சாப்பிடுங்க, உடனே குறையும்


இருப்பினும், அந்த நபர் மருத்துவ பரிந்துரையை புறக்கணிக்கத்துள்ளார். அவர் கடந்த காலத்திலும் இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்துள்ளார், ஆனால் மருத்துவரை ஆலோசித்ததில்லை. தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது.


பின்னர் அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆய்வின்படி, மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் குறையும் போது, ​​செரிப்ரோவாஸ்குலர் ரத்தக்கசிவு (cerebrovascular haemorrhage) காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.


"குறிப்பிடத்தக்க கடந்தகால மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை இல்லாத 41 வயது ஆண் ஒருவர், ஒரு பெண் நண்பருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்தார். அவர் இரவில் 2 மாத்திரைகள் சில்டெனாஃபில் (ஒவ்வொன்றும் 50 மி.கி.) மற்றும் மது அருந்தியிருந்தார். மறுநாள் காலையில், அவருக்கு உடற்சோர்வு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது"என்று ஆய்வு கூறுகிறது.


பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன், 300 கிராம் அளவுக்கு ரத்தம் உறைந்திருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மது மற்றும் மருந்துகளின் கலவையும், ஏற்கனவே இருந்த உயர் ரத்த அழுத்தமும் அவரது மரணத்திற்கு வழிவகுத்தது என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.


மருத்துவ ஆலோசனையின்றி இதுபோன்ற மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அரிய வழக்கை வெளியிட்டதாக ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


மேலும் படிக்க | அடிவயிற்று கொழுப்பை குறைக்க..தினமும் காலையில் இந்த ஜூஸை குடியுங்க