அசங்காவ்: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அசங்காவ் ரயில் நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பிளாட்பாரத்தில் ரயிலுக்காக பயணிகள் காத்திருந்தனர். அப்பொழுது ஒரு நபர் பிளாட்பாரத்தில் இருந்து கீழே இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த சமயத்தில் ரயில் ஒன்று அவருக்கு பின்னால் வேகமாக வந்தது. அதில் இருந்து தப்பிக்க பிளாட்பாரத்துக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் சிக்கிக்கொண்ட அந்த நபர் உயிர் பிழைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் பிளாட்பாரத்தை கடந்து சென்றதும், ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அந்த நபருக்கு என்ன ஆனது என்று எட்டி பார்த்தனர். ஆனால் அந்த நபர் அசால்டாக தண்டவாளத்தை கடந்து செல்கிறார். இந்த சம்பவம் கடந்த ஜூன் 25 ஆம் தேதி நடந்துள்ளது.