தில்லி தலைநகரின் புறநகர் பகுதியான காசியாபாத்தில் அமைந்துள்ள தாசனா (Dasna) சுங்கசாவடியில் பயணிக்கும், ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், அவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காசியாபாத் தேசிய நெடுஞ்சாலை (என்எச் 24) அமைந்துள்ள தாசனா (Dasna) சுங்கசாவடியில் வாகனத்தில் வந்த பயணியிடம் பணம் கேட்டுள்ளனர். அவர்கள் பணம் தர மறுத்ததால், இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சுங்கசாவடி ஊழியர்கள் ஐந்து பேர் மூது எப்ஐஆர் (FIR) பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளனர். 


இதுபோன்று பல சர்ச்சைகள் சுங்கசாவடியில் ஏற்ப்பட்டு உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் உள்ள சுங்கசாவடி பிரச்சனையில் உயிர்பலியும் ஏற்ப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தகது. 


போலிசார் வழங்கிய தகவலின் படி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவில் டசனா சுங்கசாவடியில் இரு தரப்பினருக்கும் இடையே ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து ஒருவர் கூட புகார் அளிக்கவில்லை. ஆனால் இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதால், காஸியாபாத்தின் மூத்த போலீஸ் கண்காணிப்பாளரை, தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முசூர் போலிஸ் நிலையத்திற்கு புகார் பதிவு செய்யப்பட்டது. 


 



பின்னர் விசாரணை மேற்கொண்ட போலீசார், இதுவரை ஏழு பேரை கைது செய்துள்ளது. மேலும் சில பேர் அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்களையும் கண்டுபிடுப்போம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.