ஜி7 உச்சி மாநாட்டில்  பங்கேற்க  உலகத் தலைவர்கள் அனைவரும் ஜெர்மனியில் கூடியுள்ளனர். அப்போது அனைத்து தலைவர்களும் பரஸ்பரம் சந்தித்து பேசினர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியர்களின் மனம் பெருமிதம் கொள்ளும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், நரேந்திர மோடியும் சந்திக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோடியைத் தேடும் பிடனின் கண்கள்


கனடா பிரதமரை பிரதமர் மோடி சந்தித்து கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம். அப்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் கண்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தேடின. அத்தகைய சூழ்நிலையில், ஜோ பைடன் தானே பிரதமர் மோடியிடம் சென்று  பின்னால் வந்து அவரது தோளில் கை வைத்து கவனத்தை ஈர்க்கிறார்.


இரண்டு நண்பர்களின் சந்திப்பு


இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உடனை எழுந்து கை குலுக்கினார், இரு தலைவர்களும் அன்புடன் சந்தித்தனர். பிடனைப் பார்த்த பிறகு, மோடி படியில் ஏறி, தோளில் கை வைத்து ஜோ பிடனின் கையை குலுக்குகிறார். இரு தலைவர்களும் கைகுலுக்கி சிரித்தனர். காணொளியை பார்க்கும் போது  பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்தது போல் தோன்றுகிறது.


மேலும் படிக்க | G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பயணம்


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்: 



ஜெர்மனியில் முக்கிய தலைவர்கள்


இந்த முறை ஜெர்மனி G7 நாடுகளுக்குத் தலைமை தாங்குகிறது . G-7 குழுவானது உலகின் ஏழு வளர்ந்த நாடுகளின் குழுவாகும். இந்த குழுவில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா அடங்கும். அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இதில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR