Gold Import Ban: ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள்

மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளை இறுக்கும் விதமாக ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி 7 நாடுகளின் குழு தடை விதிக்கும் என்று தெரிகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 26, 2022, 09:22 PM IST
  • ரஷ்யாவின் தங்க ஏற்றுமதிக்கு தடை
  • ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்
  • ரஷ்யாவின் உற்பத்தியில் 90 சதவிகிதம் G7 நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது
Gold Import Ban: ரஷ்ய தங்கத்தை இறக்குமதி செய்ய தடை விதிக்கும் ஜி7 நாடுகள் title=

மாஸ்கோ மீதான பொருளாதாரத் தடைகளை இறுக்கும் விதமாக ரஷ்யாவிடம் இருந்து தங்கத்தை இறக்குமதி செய்ய ஜி 7 நாடுகளின் குழு தடை விதிக்கும் என்று தெரிகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடக்க, ஏழு (G7) நாடுகளின் குழு ரஷ்ய தங்கம் இறக்குமதியை தடை செய்யும் என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை (2022 ஜூன் 26) தெரிவித்துள்ளது.

ஜி 7 நாடுகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை நடைபெறும் உச்சிமாநாட்டில் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மூன்றாம் உலகப் போர்? லண்டன் மீது முதலில் குண்டு வீசப்படும்

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், "ரஷ்யாவிற்கு பல்லாயிரக்கணக்கான டாலர்களை சம்பாதித்து கொடுக்கிறது தங்க ஏற்றுமதி. ர்ஷ்யாவிடம் இருந்து தங்கத்தின் இறக்குமதியை நாங்கள் தடைசெய்வோம் என்று G7 ஒன்றாக அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் ரஷ்ய தங்கத்தின் மீதான தடை "ரஷ்ய தன்னலக்குழுக்களை நேரடியாக தாக்கும் மற்றும் புடினின் போர் இயந்திரத்தின் இதயத்தில் தாக்கும்" என்றார்.

ஜான்சன் கூறினார்: "இந்த அர்த்தமற்ற மற்றும் காட்டுமிராண்டித்தனமான போரில் புடின் தனது குறைந்து வரும் வளங்களை வீணடிக்கிறார். அவர் உக்ரேனிய மற்றும் ரஷ்ய மக்களின் இழப்பில் தனது ஈகோவை பணமாக்குகிறார். புடின் ஆட்சிக்கு அதன் நிதியுதவியை நாம் பட்டினி போட வேண்டும்."

மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

சக G7 உறுப்பினர்களான கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து எடுக்கப்பட்ட கூட்டு நடவடிக்கையாக பிரிட்டனால் இந்த நடவடிக்கை ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக, மூன்றாம் உலகப் போர் நடந்தால் முதலில் லண்டன் மீது குண்டு வீசப்படும் என்று விளாடிமிர் புட்டினின் நெருங்கிய வட்டாரங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதும் இதன் பின்னணியில் இருக்கும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச தங்க வர்த்தகத்தில் லண்டனின் முக்கியப் பங்கைக் கருத்தில் கொண்டு, "இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியில் இருக்கும், முறையான சர்வதேச சந்தைகளில் ரஷ்யாவின் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும்" என்று பிரிட்டன் கூறியது.

மேலும் படிக்க | உக்ரைன் மீது KH-22 அஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்

பிற G7 நாடுகளும் இந்த தடையை முறையாக அறிவிக்கும் என்று ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி தெரிவித்தார். "செவ்வாயன்று அந்த அறிவிப்பு வெளியாகும். இந்த அறிவிப்பே G7 கூட்டத்தில் முதன்மையானதாக இருக்கும்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அமெரிக்க அதிகாரி கூறினார்.

"எரிசக்திக்கு அடுத்தபடியாக, ரஷ்யாவிற்கு இரண்டாவது பெரிய ஏற்றுமதி தங்கம் ஆகும். புடின் மற்றும் ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக உள்ளது தங்க ஏற்றுமதி" என்று அமெரிக்க அதிகாரி கூறினார்.

வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள், விமான நிறுவனங்கள், உயர் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகளால் ரஷ்யாவின் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் அழுத்தத்தில் உள்ளது.

இப்போது, ​​தங்கச் சந்தையிலும் தடை என்பது ரஷ்யாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். வெள்ளை மாளிகையின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் மொத்த தங்க ஏற்றுமதியில் ஐந்து சதவிகிதம் மற்றும் ரஷ்யாவின் உற்பத்தியில் 90 சதவிகிதம் G7 நாடுகளுக்கு சென்றது.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News