Watch Viral Video: ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு
ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலசரிவின் பயங்கரமான காட்சிகளை காட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் பயாசி அருகே ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.
ANI பகிர்ந்த வீடியோவில், ஒரு நீளமான, குறுகிய சாலையில் மலையின் ஒரு பகுதி கீழே விழுந்து சரியும் போது பாதுகாப்பிற்காக அதை விட்டு விலகி செல்வதைக் காணலாம். எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நிலசரிவின் பயங்கரமான காட்சிகளை காட்டும் வீடியோ வைரலாகியுள்ளது.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் உத்தரகண்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொலைதூர பகுதிகளில் அமைந்துள்ள மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ச்சியான மழை உத்தரகண்ட் மாநிலத்தின் நெடுஞ்சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டேராடூனில் இருந்து பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி செல்லும் சாலையின் பல இடங்களில் பாறைகள் விழுந்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளது
ALSO READ | தங்கத்தை வித்தா வருமான வரி கட்டணுமா...!!!
ரிஷிகேஷ்-பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள சாமோலியில் உள்ள டோட்டகாட்டி, ஜலேஷ்வர் மகாதேவில் கேதார்நாத் செல்லும் பாதை, உத்தரகாஷியில் சிலாய் வளைவில் யமுனோத்ரி செல்லும் பாதை ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் சனிக்கிழமை அன்று, தேவைப்பட்டால் பேரழிவு பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் நீண்டகால திட்டத்தை தயாரிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களை கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் நடத்திய ஆலோசனையில், பேரிடரை சமாளிப்பதற்கான ஒரு திட்டத்தை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
உத்தரகண்ட் மாநிலத்தின் தொலைதூர கிராமத்தில் இருந்து காயமடைந்த ஒரு பெண்ணை இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர் ( ITBP) சனிக்கிழமை மீட்டனர்.
ALSO READ | 73 நாட்களில் தடுப்பு மருந்து வருமா.. சத்தியமில்லை என்றது SII...!!!
நிலச்சரிவு ஏற்படக்கூடிய ஆபத்தான பகுதிகள், வெள்ளம் சூழ்ந்த பகுதிகள், வழுக்கும் சரிவான பாதைகள் வழியாக படை வீரர்கள், அந்த பெண்ணை 15 மணி நேரம் ஸ்ட்ரெச்சரில் ஏற்றிச் சென்று 40 கிலோமீட்டர் தூரத்தை கடந்தனர். பின்னர் அந்த பெண் மருத்துவமனைக்கு வெளியேற்றப்பட்டார்.