கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென்மேற்கு பருவமழையானது கர்நாடகாவில் தீவிரமடைந்து வருவதால் அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பிவருகிறது. இதையடுத்து, சமீபத்தில் கர்நாடக முதலவர் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில் எந்த பிரச்சனையும் இருக்காது எனவும், உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடபடுவதாகவும் தெரிவித்திருந்தார். 


கனாடகாவில் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ள நிலையில் விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் கூறுகையில்....! 


கர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணையத்தின் முடிவுக்காக காத்துகொண்டிருக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், அவர் கர்நாடக விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதால் நான் விவசாயத்திற்காக தண்ணீர் கட்டாயமாக திறந்துவிட வேண்டும். எனவே, கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.