ஆர்ட்டிகள் 370, CAA தொடர்பான முடிவுகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாரணாசி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து, குடியுரிமை சட்ட திருத்தம் ஆகிய நடவடிக்கைகளில் ஒருபோதும் பின்வாங்கப் போவது இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேசத்தின் நன்மை கருதியே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். 


இதை தொடர்ந்து அவர் பேசுகையில்... எத்தனை அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் இந்த நடவடிக்கைகளில் நாங்கள் உறுதியாக இருப்போம். ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் இந்த ஒரு முடிவுகளையும் எடுத்திருக்கிறோம். நாங்கள் எடுத்த முடிவை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னதாக வாரணாசியில் 63 அடி உயர பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சிலையை வாரணாசியில் மோடி திறந்து வைத்தார். 430 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையையும் வாரணாசியில் மோடி இன்று திறந்து வைத்தார்.



மேலும், தனது அரசாங்கத்தின் சில முக்கிய முடிவுகளை மேற்கோளிட்டு, அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு அமைக்கப்பட்ட அறக்கட்டளையை மோடி குறிப்பிட்டு, அது "விரைவாக" செயல்படும் என்று வலியுறுத்தினார். "அயோத்தியில் ஒரு பிரமாண்டமான ராம் கோயில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை வேகமாக செயல்படும்" என்று அவர் கூறினார்.


அறக்கட்டளை அமைக்கப்பட்ட பின்னர், 'ராம் தாம்' கட்டுமான பணிகள் வேகமாக தொடங்கும் என்று அவர் கூறினார். கோயிலின் கட்டுமானம் மற்றும் மேலாண்மை குறித்து ஆராயக்கூடிய ஒரு அறக்கட்டளையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவை அரசாங்கம் சமீபத்தில் அமைத்தது.



பிரதமர் தனது மக்களவைத் தொகுதியில் 1,254 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 திட்டங்களுக்கு முன்னதாக துவங்கி வைத்தார். இதை தொடர்து IRCTC-யின் 'மஹா கால் எக்ஸ்பிரஸ்'-யை வீடியோ இணைப்பு மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். உத்தரபிரதேசத்தில் வாரணாசியின் மூன்று ஜோதிர்லிங் யாத்திரை மையங்களையும், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மற்றும் ஓம்கரேஷ்வரையும் இணைக்கும் நாட்டின் முதல் ஒரே இரவில் தனியார் ரயில் இதுவாகும்.


இதைத்தொடர்ந்து, வாரணாசியில் அமைக்கப்பட்டு உள்ள பண்டிட் தீனதயாள உபாத்யாயா நினைவு மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், அங்கு நிறுவப்பட்டு உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர பஞ்ச லோக சிலையை திறந்து வைத்தார். அவரது சிலையை வணங்கி மரியாதை செலுத்தினார்.