Dense Fog: குளிர் கால மூடுபனியினால் தத்தளிக்கும் தலைநகர் டெல்லியின் மக்கள்
Delhi Cold: டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியினால் புலப்பாடு மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் நிலை தொடர்கிறது...
நியூடெல்லி: டெல்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அடர்த்தியான மூடுபனியினால் புலப்பாடு மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்களின் போக்குவரத்தில் தாமதம் ஏற்படும் நிலை தொடர்கிறது. குளிர் காலத்தில் தத்தளிக்கும் தலைநகர் டெல்லியில் இன்று (ஜனவரி 11, புதன்கிழமை) குறைந்தபட்ச வெப்பநிலையில் சிறிதளவு உயர்வு இருந்தாலும், அடர்ந்த பனிமூட்டம் போக்குவரத்தை வெகுவாக பாதித்துள்ளது.
டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் பகுதியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குளிர் அலையால் தத்தளிக்கும் தலைநகர் டெல்லியில் அடர்த்தியான மூடுபனி தொடர்ந்து நிலவுகிறது. ஆனால், இன்று குறைந்தபட்ச வெப்பநிலையில் சிறிது உயர்வு காணப்பட்டது.
டெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் பகுதியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை நேற்று 6.4 டிகிரி செல்சியஸாக இருந்தது.
இந்திய வானிலை ஆய்வு மையம்
“வட இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் குளிர் அலைக்கு மத்தியில், டெல்லியில் உள்ள சப்தர்ஜங்கில் இன்று காலை 6.10 மணிக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. பாலம் பகுதியில் பார்வைத்திறன் 100 மீட்டரில் பதிவாகியுள்ளது” என்று IMD தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Delhi Snow: டெல்லி கொல்கத்தாவில் இப்படி பனிப் பொழிந்தால் எப்படி இருக்கும்?
டெல்லிக்கு செல்லும் விமானங்கள் ரயில்கள் தாமதம்
டெல்லியில் வெப்பநிலையில் சிறிது அதிகரிப்பு காணப்பட்டாலும், அடர்த்தியான பனிமூட்டம் தலைநகரில் தெரிவுநிலையை குறைத்துள்ளது, இது பல விமானங்கள் மற்றும் ரயில்கள் செல்வதில் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தாமதமாக டெல்லி செல்லும் விமானங்களின் பட்டியல்
சில விமானங்கள் (டெல்லி-சிம்லா, டெல்லி-காத்மாண்டு, டெல்லி-சென்னை, டெல்லி-ஜெய்சால்மர், டெல்லி-பரேலி, டெல்லி-மும்பை, டெல்லி-வாரணாசி, டெல்லி-ஸ்ரீநகர், டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-கௌஹாத்தி) பனிமூட்டம் காரணமாக தாமதமாகி வருகின்றன. தேசிய தலைநகரில் கடும் குளிர் நிலவுவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி வானிலை முக்கிய தகவல்கள்
ஜனவரி 14 ஆம் தேதி தேசிய தலைநகர் டெல்லியில் குளிர் அலையின் இரண்டாவது கட்டம் தொடங்கும். பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, வடக்கு ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் லேசான மழை அல்லது தூறல் பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது.
ஜனவரி 14ஆம் தேதி முதல் மீண்டும் குளிர் காலநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐஎம்டி விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி தெரிவித்துள்ளார். “வடமேற்கு மற்றும் பஞ்சாபில் புதிய குளிர் காலநிலை இருக்கும். நாங்கள் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் தினசரி வெப்பநிலை மேலும் மூன்று டிகிரிக்கு குறையுமா இல்லையா என்பதை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம். வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது மற்றும் ஜனவரி 14 குளிர் மேலும் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளன,” என்று ஐஎம்டியின் விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி கூறினார்.
தில்லியில் உள்ள சஃப்தர்ஜங்கில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 6.4°C ஆகவும், பாலத்தில் காலை 8.30 மணி வரை குறைந்தபட்ச வெப்பநிலை 7.5°C ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்திய வானிலை மையத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டு, டெல்லியில் ஜனவரி 5 முதல் ஜனவரி 9 வரை குளிர் அலைகள் பதிவாகியுள்ளன, குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரி 8 அன்று 1.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியிருந்தது.
டெல்லியில் ஜனவரி மாதத்தில், இதுவரை 50 மணிநேரம் அடர்ந்த மூடுபனி காணப்பட்டது என்றும், இது 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக பதிவான மூடுபனி என்று மூத்த ஐஎம்டி விஞ்ஞானி ஆர் கே ஜெனமணி தெரிவித்தார். இது கடந்த பத்தாண்டுகளில் மிகவும் அதிகமான அளவு என்று கூறப்படுகிறது.
ஜனவரி தொடக்கத்தில் இருந்து டெல்லியில் நிலவிய குளிர்ந்த வானிலையால் மின்சாரத் தடைகள் அதிகம் ஏற்பட்டன. வீடற்ற மக்கள் வாழ்வதற்கு மிகவும் சிரமம் ஏற்பட்டது. பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விரைவில் Wistron iPhone தொழிற்சாலையை கையகப்படுத்த உள்ளது டாடா குழுமம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ