கர்நாடக, கேரள மாநிலங்களில் பிரேத கல்யாணம் என்ற ஒரு வினோதமான சடங்கு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த பிரேத கல்யாணம் என்பது சாதாரண திருமணம் தான் என்றாலும், இதில் அன்பு, பாசம், குடும்ப உறவு என அனைத்தையும் கொண்டாடும் விஷயம் ஒன்று உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக திருமணம் முடிவாகிய பிறகு மணமகன், மணமகளுக்கு புத்தாடைகள், நகைகள் என அனைத்தையும் வாங்கி திருமண நாளில் மணமக்களுக்கு அணிவித்து அழகு பார்த்து மேடைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். பின்னர் மணமக்களுக்கு மத்திரங்கள், சுப வாத்தியங்கள் முழங்க தாலி கட்ட வைத்து, பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும் அர்ச்சதை தூவி ஆசிர்வதிப்பர். 


ஆனால் இந்த பிரேத கல்யாண சடங்கில், இவை அனைத்தும் நடக்கும். ஆனால் மண மக்கள் மட்டும் மேடையில் இருக்க மாட்டார்கள். அது ஏன் என்றால், ஒரு குடும்பத்தில் பிரசவத்தின்போதே குழந்தை இறந்து பிறந்தாலோ, சிறுவயதிலேயே குழந்தை இறந்துவிட்டாலோ அந்த குழந்தை பிறந்து 30 ஆண்டுகள் கழிந்தபின்னர் அக்குழந்தைக்கும், அதேபோல் உயிரிழந்த மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைக்கும் திருமணம் செய்து வைக்கப்படும்.


மேலும் படிக்க | மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு -பொதுமக்கள் போராட்டம்


இருவீட்டாரும் இணைந்து வழக்கமான பெண் கேட்பு, நிச்சயம், திருமண சடங்கு என அனைத்து சடங்கையும் செய்துகொள்வர். மேலும், திருமண நாளின் போது பெண்ணிற்கு அலங்காரம், மாப்பிள்ளைக்கு மரியாதை போன்றவையும் விட்டுபோவதில்லை. அலங்கரிக்கப்பட்ட மண மக்களை மனையில் அமர வைத்து, அவர்களுக்கு பெயர் சூட்டவில்லை என்றால் மேடையிலேயே பெயரும் சூட்டப்படுகிறது. பின்னர் உறவினர்களால் மாலை மாற்றப்பட்டு, மேடையை 7 முறை சுற்றி வரும் சடங்கும் நடைபெறுகிறது.


தாலி கட்டும் தருணம் பெரியோர்கள் அர்ச்சதை தூவி மணமக்களை வாழ்த்துகின்றனர். இந்த முழு சடங்கில் திருமணம் ஆகாதவர்கள், சிறு வயதினர்கள் என யாரும் கலந்துக்கொள்ள பொதுவாக அனுமதி இல்லை. சொல்லப்போனால், இச்சடங்கை திருமணமாகாதவர்கள், சிறுவர்கள் பார்ப்பதற்கு கூட அனுமதி இல்லையாம்.


இவ்வாறு இறந்த தங்களது வீட்டு செல்வத்திற்கு பிறந்த நாளை கொண்டாடுவது, நினைவு நாளை கொண்டாடுவது, திதி அளிப்பது போன்றவற்றுடன் நிறுத்திக்கொள்ளாமல், தங்களது குழந்தைகள் வளர்ந்து வயது வந்ததாக நினைத்து, அவருக்கு பெண்/மாப்பிள்ளை தேடி பேசி முடித்து கோலாகலமாக திருமணம் செய்து வைக்கும் முறையானது குடும்பத்தாரது இணையில்லா பாசத்தின் அடையாளமாக திகழ்கிறது.


அதேபோல் இறந்தவர்களை காலத்திற்கும் நினைவில் வைத்திருக்க உதவும் இந்த வினோத சடங்கு முறையானது இன்றும் கேரள, கர்நாடக மாநிலத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.



இது குறித்த பதிவு ஒன்றை யூடியூபர் அன்னி அருண் என்பவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


 



மேலும் படிக்க | கமுதி அருகே முது மக்கள் பயன்படுத்திய தாழிகள் ஏராளமானவை கண்டுபிடிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ