கொல்கத்தாவில் கோவிட் -19 குறித்து போலி செய்திகளை பரப்பிய பெண் கைது செய்யப்பட்டார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்கம்: அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 149 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 873-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்து பலரும் பலவிதமான செய்திகளை உண்மையா பொய்யா என்பது தெரியாமலேயே பரப்பி வருகின்றனர். 


இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதாக போலி செய்திகளை பரப்பியதாக கொல்கத்தாவில் ஒரு பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பெலியாகாட்டா மருத்துவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக போலி சமூக ஊடக இடுகையை வெளியிட்டதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் சந்திரீமா பௌமிக் (29) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 


வெள்ளிக்கிழமை, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது பத்திரிகையாளர் சந்திப்பின் போது இந்த விவகாரத்தை எழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் விசாரித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கொல்கத்தா காவல் ஆணையருக்கு அறிவுறுத்தினார். மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன.