நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரத் திட்டத்தின் தரவை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. தேர்தல் ஆணையம் மார்ச் 15ம் தேதிக்குள் இந்தத் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் 2019, ​​ஏப்ரல் 12ம் தேதி முதல் 2024 பிப்ரவரி 15ம் தேதி வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்கள் பொதுக் வெளியில் மக்களின் பார்வைக்குக் கிடைக்கும். இதன் மூலம் எந்தெந்த தேர்தல் கட்சிகள், எந்தவொரு நபர்/நிறுவனம் மூலம் எவ்வளவு நன்கொடை கொடுக்கப்பட்டது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திரத் திட்டத்தின் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க, உச்சநீதிமன்றம் மார்ச் 12 மாலை வரை கால அவகாசம் வழங்கிய நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டு தனித்தனி பட்டியல்களை வழங்கும். ஒரு பட்டியலில் தேர்தல் பத்திரம் வாங்கப்பட்ட தேதி, வாங்குயவரின் பெயர், பத்திரத்தின் மதிப்பு போன்றவற்றை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும். மற்றொரு பட்டியலில், அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களிலிருந்து (Electoral Bonds) எவ்வளவு நன்கொடை பெற்றன என்ற தரவுகள் இருக்கும்.


தேர்தல் பத்திரங்கள் பற்றிய அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில், தரவுகள் அனைத்தையும் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள் பற்றிய தரவுகள் ஏற்கனவே, தேர்தல் ஆணையத்திடம் உள்ள நிலையில், பாரத் ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த தகவல்கள் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. 


தேர்தல் பத்திரத் தரவுகளிலிருந்து, எந்தெந்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன என்ற முழுமையான பட்டியல் வெளியிடப்படும். தனிநபர்/நிறுவனம் எந்த தேதியில் எவ்வளவு தேர்தல் பத்திரங்களை வாங்கினார் என்பதும் தெரியவரும். தேர்தல் பத்திரங்களை யார் பெற்றுள்ளனர் என்ற விரிவான பட்டியலும் வெளியிடப்படும். எனினும், யார் எந்தக் கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்ற விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை. 


மேலும் படிக்க | தேர்தல் பத்திர நிதி விவகாரம்... SBI வங்கிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தாக்கல்!


தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள் மற்றும் அவற்றை பணமாக்கியவர்களின் விவரங்களைப் பொருத்தி விபரங்களை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்கவில்லை. உதாரணத்திற்கு A என்ற நிறுவனம் 10,000 ரூபாய்க்கு தேர்தல் பத்திரத்தை வாங்கியதாக ஒரு தரவு உள்ளது. அதே போன்று X என்ற ஒரு கட்சி 10,000 ரூபாய்க்கான பத்திரத்தை பணமாக்கியது என்றும் தரவு காட்டுகிறது. எனினும் A என்ற நிறுவனம் X என்ற ஒரு கட்சிக்கு தான் தேர்தல் பத்திரம் கொடுத்தது என்பதை இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் ஆணையத்திடம் SBI சமர்ப்பித்த விவரங்களில் ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள 'தனித்துவ எண்ணெழுத்து குறியீடு சேர்க்கப்படாமல் இருக்கலாம். இதுகுறித்து விபரம் வெளியில் வராது என தெரிகிறது. தேர்தல் பத்திரத்தை வாங்கியவர் மற்றும் பெறுபவர் இருவரின் தனித்துவமான எண்ணெழுத்து குறியீடு தெரிந்தால் தான், யார் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பதைக் கண்டறியலாம்.


எஸ்பிஐ இது குறித்து கூறுகையில், இந்த தனித்துவமான எண்ணெழுத்து குறியீடு கணினியில் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறியுள்ளது. ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனிப்பட்ட குறியீடு பாதுகாப்பு அம்சம் என்றும், விற்பனை செய்யும் நேரத்திலோ அல்லது டெபாசிட் செய்யும் நேரத்திலோ பதிவு செய்யப்படாது என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த விபரம் இல்லாமல் அரசியல் கட்சி மற்றும் நன்கொடையாளர் தரவுகளைப் பொருத்துவது சாத்தியமில்லை எனக் கூறுகிறார்.


தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விபரம்


2017-18 மற்றும் 2022-23 க்கு இடையில் மொத்தம் ரூ.11,987 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக அதிகபட்ச நன்கொடைகளை (55%) பெற்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதீய ஜனதா கட்சி மொத்தம் ரூ.6,566 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,123 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும்  ரூ.1,093 கோடியும் நன்கொடைகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்தன. பாரத ராஷ்டிர சமிதி ரூ.913 கோடியும், பிஜு ஜனதா தளம் ரூ.774 கோடியும், திமுக ரூ.617 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.382 கோடியும், தெலுங்கு தேசம் கட்சி ரூ.147 கோடியும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன.


மேலும் படிக்க | தேர்தல் பத்திர நிதி விவகாரம்...  4 மாத கால அவகாசம் கேட்கும் SBI !


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ