இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் INS Vikrantஇன் சிறப்பம்சங்கள்
262 மீட்டர் நீளமுள்ள INS Vikrantஇன் கட்டுமானம் 2009 பிப்ரவரியில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது. INS Vikrantஇல் 26 போர் விமானங்களும் 10 ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது...
புதுடெல்லி: இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் ஐ.என்.எஸ் விக்ராந்த் விரைவில் கடலில் தனது பணியைத் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடற்படை வட்டாரங்களின்படி, ஐ.என்.எஸ் விக்ராந்தின் துறைமுக அளவிலான சோதனைகள் நிறைவடைந்துள்ளன. அடுத்தக்கட்ட சோதனைகள் செப்டம்பரில் தொடங்கும். இரண்டாம் கட்ட சோதனையான பேசின் சோதனைக்குப் பிறகு, ஐ.என்.எஸ் விக்ராந்தின் சோதனை ஓட்டம் கடலில் தொடங்கும். 2023 க்குள் விக்ராந்த் கடற்படையில் சேர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
262 மீட்டர் நீளமுள்ள INS Vikrantஇன் கட்டுமானம் 2009 பிப்ரவரியில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தொடங்கியது. INS Vikrantஇல் 26 போர் விமானங்களும் 10 ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது INS Vikrantக்காக கேரியருக்கு MiG-29K தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, Ka-31, Westland Sea King மற்றும் உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் Dhruvவும் துருவையும் INS Vikrantஇல் நிறுத்தப்படலாம்.
ஐ.என்.எஸ் விக்ராந்தின் துறைமுக சோதனைகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், கோவிட் -19 காரணமாக பேசின் சோதனைகள் தாமதமாகி வருகின்றன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பேசின் சோதனைகளில், கப்பலில் பொருத்தப்பட்ட அனைத்து அமைப்புகளும் கடலில் தரையிறக்க முடியுமா என்பதற்கான இறுதிகட்டச் சோதனை செய்யப்படும்.
இந்தS சோதனைகளின் போது, கப்பல் கட்டுமான அமைப்புகள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தியாளர்களும் அங்கு இருப்பார்கள். கோவிட் காரணமாக, இந்தச் சோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு கடற்பரப்பில் விசாகப்பட்டினத்தில் ஐ.என்.எஸ் விக்ராந்தை வைக்க இந்திய கடற்படை விரும்புகிறது. ரஷ்யாவிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா ஆயுதம் தாங்கிய போர்க் கப்பல், மேற்கு கடற்கரையில் கார்வாரில் உள்ளது. கடல் பாதுகாப்புக்காக, மூன்று carrier battle group (CVBG)க்களை ஒதுக்கீடு செய்வது இந்தியாவின் நீண்ட கால விருப்பம். இந்த CVBGக்களில் ஆயுதம் தாங்கிய கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
நீண்ட கடல் எல்லையை பாதுகாப்பதோடு, வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்காக கிழக்கு மற்றும் மேற்கில் தலா ஒரு CVBGயை நிறுத்த இந்திய கடற்படை விரும்புகிறது. மூன்றாவது CVBG, பழுது பார்த்தல் மற்றும் கூடுதல் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும்.
Read Also | NCC: 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய விரிவாக்கத் திட்டம்