அடுத்த அமெரிக்க அதிபர் வாய்புள்ள பிடனுக்கும் இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு என்ன..!!!
அமெரிக்காவில் அடுத்த அதிபர் யார் என்பது குறித்து உலகம் முழுவதும் ஒரு விவாதம் நடைபெறுகிறது.
அமெரிக்காவில் அடுத்த அதிபர் யார் என்பது குறித்து உலகம் முழுவதும் ஒரு விவாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்பும் (Donald Trump), ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடனும் களத்தில் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் (US Presidential Election 2020) டிரம்பை விட அதிக தேர்தல் வாக்குகளை பெற்று பிடென் அதிபர் நாற்காலியை நோக்கி முன்னேறி வருகிறார்.
இந்நிலையில் பிடனுக்கும் (Joe Biden) இந்தியாவிற்கும் உள்ள தொடர்பு பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஜனநாயகக் கட்சியின் சார்பாக, போட்டியிட்ட அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden) மற்றும் அவரது துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் (Kamala Harris) இருவருக்கும் இந்தியாவுடன் உறவு உண்டு. சிறப்பு என்னவென்றால், இந்த இரண்டு பேருக்கும் உள்ள தொடர்பு சென்னை (முந்தைய மெட்ராஸ்) தான். 19 ஆம் நூற்றாண்டில், கிறிஸ்டோபர் பிடனும் வில்லியம் பிடனும் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றினர். கிறிஸ்டோபர் பிடன் மற்றும் வில்லியம் பிடென் ஆகியோர் சகோதரர்கள்.
ஜோ பிடன், முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு, தனக்கும் இந்தியாவிற்கு (India) உள்ள தொடர்பு பற்றி கூறினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் ஜார்ஜ் பிடனின் வம்சத்தை சேர்ந்தவர் என்றார். ஜார்ஜ் கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டனாக இருந்தார். ஓய்வுக்குப் பிறகு, ஜார்ஜ் பிடன் இந்தியாவில் தங்க முடிவு செய்து ஒரு இந்தியப் பெண்ணை மணந்தார். இருப்பினும், இந்தியாவில் ஜார்ஜ் பிடன் என்ற நபர் தொடர்பான பதிவு எதுவும் இல்லை.
இருப்பினும், வில்லியம் மற்றும் கிறிஸ்டோபர் இரு சகோதரர்கள், அவர்கள் கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுத வணிகக் கப்பல்களின் கேப்டன்களாக இருந்தனர். கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக இந்தியாவிற்கும் லண்டனுக்கும் இடையில் மிகவும் ஆபத்து நிறைந்த கடல் பாதையில் பணியாற்றினர் தொடங்கினர். வில்லியம் 1843 இல் தனது 51 வயதில் இறந்தார். கிறிஸ்டோபர் 1858 இல் சென்னையில் இறந்தார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR