திரையரங்குகள் அக்டோபர் 1 திறக்கப்படுகிறதா... உண்மை நிலை என்ன..!!!
திரையரங்குகளை திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக, சமூக ஊடகங்களில் மிக வேகமாக செய்தி பரவி வருகிறது.
தற்போது இணையத்தில் போலி செய்திகள் பல பரவி வருகின்றன. கோவிட் -19 வழிகாட்டுதல்களை கடுமையாக பின்பற்றி, நாடு முழுவதும் உள்ள சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதாக செய்தி மிக வேகமாக பரவி வருகிறது.
இருப்பினும், அடுத்த மாதத்திலிருந்து சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இது ஒரு போலி செய்தி என பிஐபியும் (PIB Fact Check) தனது ட்வீட்டில் தெளிபடுத்தியுள்ளது
அக்டோபர் மாதம் நவராத்ரி வார இறுதிக்குள் சினிமாக்களை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு வடக்கு மற்றும் தென்னிந்தியா முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியதை அடுத்து இந்த போலி செய்தி வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள சினிமா அரங்குகள் மார்ச் முதல் மூடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட லாக்டவுன் படிப்படியாக தளர்த்தப்பட்டு நான்காம் கட்ட அன்லாக் நடவடிக்கை செம்.1 தொடங்கியது. அன்லாக்-4-ல் (Unlock-4) முன்னர் இல்லாத அளவிற்கு பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம் என அரசாங்கம் கூறியுள்ளது. 9முதல் 12ம் வகுப்பு வரையில் தன்னார்வ அடிப்படையில், பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவும் அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | திருப்பூர் ஆடை தொழிற்சாலைகள் வேறு நகரங்களுக்கு மாற்றப்படுகிறதா..!!!