`வந்தே பாரத்` விமான சேவைக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டன - முழு விவரம்
தற்போது `வந்தே பாரத்` திட்டத்தின் கீழ் விமான போக்குவரத்து சேவையை தொடங்கவுள்ளது. அதற்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
புது டெல்லி: நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து வார "வந்தே பாரத்" (Vande Bharat) திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு விமானங்களை மத்திய அரசு இயக்கியது.
தற்போது "வந்தே பாரத்" திட்டத்தின் கீழ் விமான போக்குவரத்து சேவையை தொடங்க நடைமுறைகளை மத்திய அரசாங்கம் திங்கள்கிழமை அறிவித்தது. புதிய வழிகாட்டுதல்கள் மூலம் பயணிகள் விழிப்புடன் இருக்க வேண்டிய பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் பயணச் செலவை பயணிகள் ஏற்க வேண்டியிருக்கும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (Civil Aviation Ministry) வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | வந்தே பாரத் திட்டத்தின் கீழ் 3.6 லட்சத்திற்கும் மேல் மக்கள் நாடு திரும்பியுள்ளனர்.
புதிய வழிகாட்டுதல் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முக்கியம்சங்கள்..!!
விமானத்தில் ஏறும் நேரத்தில் அனைத்து பயணிகளும் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நோய் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள்.
"பயணிக்க தகுதியான நபர்களின் வகை அவ்வப்போது உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்படும். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது இணையதளத்தில் இந்தியாவுக்கு வெளியே பயணிக்க தகுதியான நபர்களின் பட்டியலை வெளியிடப்படும்.
தகுதி வாய்ந்த நபர்கள் தங்களது பயண விவரங்களுடன் சிவில் விமான நிறுவனம் அல்லது அதன் கீழ் நியமிக்கப்பட்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
"சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்தபடி பயணம் திட்டமிடப்படாத வணிக விமானங்களில் இருக்க வேண்டும். கப்பலில் இருக்கும்போது, முகமூடி அணிவது, கை சுகாதாரம் போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கை குறித்து கவனமாக இருக்க வேண்டும்" என்று அறிவிப்பில் கூறியுள்ளது.
ALSO READ | இந்திய ரயில்வே புதிய பரிசு, 44 புதிய வந்தே பாரத் ரயில்கள் தொடர்பான நல்ல செய்தி
புதிய வழிகாட்டுதல்கள் படி, வந்தே பாரத் விமானங்களின் பயணிகள் தங்களை வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பதிவு செய்ய வேண்டும். விமான
உள்வரும் விமானங்களுக்கும் பயணச் செலவும் பயணிகளால் ஏற்கப்படும். COVID-19 தொற்று நோய் பாதிப்புக்கு உள்ளாகாத குழுவினர் மற்றும் ஊழியர்கள் மட்டுமே விமானங்களையும் கப்பல்களையும் இயக்க அனுமதிக்கப்படுவார்கள்.
"அனைத்து வந்தே பாரத் பயணிகளின் விவரங்கள், அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் முன்கூட்டியே பகிர்ந்து கொள்ள வேண்டும்.
"அனைத்து விமான போக்குவரத்து பயணிகளின் விவரங்களையும் சமர்ப்பிக்கவும், வெளிநாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட இந்திய தூதரகங்களுடன் மாநில / யூனியன் பிராந்திய (State/Union Territory government)அரசாங்கத்திற்கு ஒரு நகலுடன் பகிர்ந்து கொள்ளவும்".
இவ்வாறு புதிய வழிகாட்டுதல் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது